science

img

நிலவின் தென் துருவத்தை ஆராயச் செல்கிறது

ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 14- நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் திங்களன்று அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இதற்கான  20 மணி நேர கவுண்ட் டவுன் ஞாயிறன்று காலை தொடங்கியது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும்.  பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவை சென்றடையும்.  இந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ‘ரெட்ரோ ரிப்ளெக்டர்’ என்ற கருவியையும் சந்திரயான்-2 நிலாவுக்கு கொண்டு செல்ல உள்ளது. இதுவரை எந்த விண்கலமும் இறங்காத இடத்தில் சந்திராயன்-2  தடம் பதிக்கவுள்ளது. சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார்.  இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

;