science

img

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1.4 லட்சம் கணக்குகள் ஹேக் செய்ய முயற்சி - சைபர் செக்யூரிட்டி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1.4 லட்சம் கணக்குகள், ஹேக் செய்ய முயற்சிக்கப்படுவதாக அண்மையில் சைபர் செக்யூரிட்டி அதன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டில், உலக அளவில் கணக்குகளை ஹேக் செய்யப்படுவதில், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு வருடத்தில் மட்டும் 120.8 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்படுவதாகவும், இது போன்றுமொத்தமாக 30 பில்லியன் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தாக்குதலும், ஒரு நபரோ அல்லது ஒரு கணினியோ உங்களுக்கே தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் சமுக வலைதள கணக்குகளின் திருடப்பட்ட விவரங்கள் கொண்டு ஹேக் செய்ய முயற்சிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலான நேரங்களில், போட்னெட்ஸ் (Botnets) அல்லது ஆல்-இன்-ஒன் (AIO) போன்ற அப்ளிகேஷன் மூலம் நடைபெறுகின்றது. இந்த அப்ளிகேஷன்ஸ் மூலம் குழுவில் உள்ளவர்களின் தகவல்களையோ அல்லது தனிப்பட்டவர்களின் தகவல்களையோ பெற முடியும்.

போட்னெட்ஸ் என்பது பல கணினிகள் ஒருங்கிணைந்து வெவ்வேறு கட்டளைகள் மூலம் செயல்பட்டு, ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்ட கணக்குகளுக்குள் நுழைய முற்படும். அதே போல் ஆல்-இன்-ஒன் என்பது தனி நபர் ஹேக்கிங் செய்ய உதவும்.

இதுபோன்று அமெரிக்காவில் கடந்த 2018-ல், 1252.29 கோடி கணக்குகள் ஹேக் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இரண்டாவதாக இந்தியாவில், 120.87 கோடி கணக்குகள் ஹேக் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, கனடாவில் 102.54 கோடி கணக்குகளும், ஜெர்மனியில் 76.07 கோடி கணக்குகளும், ஆஸ்திரேலியாவில் 10.46 கோடி கணக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இது குறித்து சைபர் நிபுணர் மிர்ஸா ஃபைசான் கூறுகையில், ”மீடியா, கேமிங்க் அல்லது பொழுதுபோக்கு சம்பந்தமான கணக்குகளில், பயனர்கள் முதல் முறை login செய்யும்போது, அவர்களது முழு விவரங்களையும் சர்வீஸ் ப்ரோவைடரிடம் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள் பாதுகாப்பு குறைவு உடைய சர்வீஸ் ப்ரோவைடர்கள் மூலம் எளிதாக பயனர்களின் கணக்குகளை ஹேக்கிங் செய்ய முடியும். இது போன்ற தாக்குதலை தடுக்கவே சில பெரிய ஐ.டி நிறுவனங்கள், தங்களது login விவரங்களை டெக்ஸ்ட் ஃபைலில் சேமித்துவைக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில் SQL tools பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான விவரங்களை எடுத்து, அந்த விவரங்கள் விற்கப்படுகின்றன” என்றும் தெரிவித்தார்.


;