science

img

சூரியனின் மேற்பரப்பை துல்லியமாக காட்டும் புகைப்படம்!

சூரியனின் மேற்பரப்பை துல்லியமாக காட்டும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய டானியல் கே இனூய் சூரிய தொலைநோக்கியை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை அமைத்து உள்ளது. இது ஹவாயில் உள்ள ஹலேகலே என்ற எரிமலையில் அமைந்துள்ளது. சூரியனை  முன்னோடியில்லாத வகையில் விரிவாகக் காண தொலைநோக்கி (4 மீட்டர்) கண்ணாடியைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி (3,048 மீட்டர்) உயரத்தில், மலையின் உச்சியில் இது அமைந்துள்ளது.  

இந்நிலையில், இந்த சூரிய தொலைநோக்கி சூரியனை மிக நெருக்கமாக படம் பிடித்து உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட சூரிய மேற்பரப்பு படங்களைவிட மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படத்தை எடுத்து உள்ளது. அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் முகமை இதன் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது சூரிய அறிவியலின் புதிய யுகத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.