உலகளவில், ஆறுகளில் ஆண்டிபயாடிக் பொருட்கள் கலந்திருக்கிறதாகவும், இதனால் 300 மடங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் ஹெல்சிங்கியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நச்சியலாளர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், 72 நாடுகளின் ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்ட 711 மாதிரிகளில், மூன்றில் இரண்டு பங்குகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுவான ஆண்டிபயாடிக் பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல இடங்களில், ஆண்டிபயாடிக் மருந்துகளில் செறிவுகள் இருந்தன. குறிப்பாக, மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும் ஆண்டிபயாடிக் பொருட்களில் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.
இதில் சிப்ரோஃப்ளாக்சின் (Ciprofloxacin) என்ற குடல் மற்றும் சிறுநீரக குழாய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்து அதிக அளவில் இருந்தது. அதே போல், வங்காளதேசத்தில் மற்றொரு பரவலாக பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்தான மெட்ரோனிடசோல் (Metronidazole) குறிப்பிட்ட அளவை விட 300 மடங்கு அதிகமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் கவலை தரக்கூடியவையாக இருந்தாலும் உண்மையை வெளி கொண்டுவந்துள்ளன என்று நியூயார்க் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நிறுவனத்தின் விஞ்ஞானி அலிஸ்டர் பீஸால் தெரிவித்தார்.
இது போன்று ஆறுகளில் ஆண்டிபயாடிக் பொருட்கள் நிறைந்திருப்பது, வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பும் அதிகரிக்கும். மேலும், ஆசிய மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் அதிக தாக்கம் காணப்பட்டதாகவும், குறிப்பாக வங்க தேசம், கென்யா, கானா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் கழிவுகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.