பூமியைத் தாக்கவரும் சூரிய புயலால் இணைய சேவை பாதிக்கும் அபாயம் உள்ளதாக என்ஓஏஏ மற்றும் எஸ்டபிள்யுபிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூரியனில் ஏற்பட்டிருக்கும் வெப்பப் புயல் காரணமாக உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும் அபாம் இருப்பதாக கதேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ), வான்வெளி தட்பவெப்ப முன்கணிப்பு மையம் (எஸ்டபிள்யுபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கம் மைனே மற்றும் மெக்சிகன் உள்பட அமெரிக்காவின் மேல்பகுதிகளில் உணரப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜி1 வகை புவிகாந்த அலை கே-இன்டக்ஸ் 5 என்ற அளவில் பூமியைத் தாக்கக்கூடும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட புவிகாந்த அலைகளில் ஜி1 என்பது மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தது என்றாலும், இந்த தாக்கத்தால் பலவீனமான மின் இணைப்புகளில் சில வேறுபாடுகள் பூமியில் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வான்வழி போக்குவரத்து, செயற்கைக் கோள் செயல்பாடுகளில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்றும், காலநிலைகளுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் விலங்குகளும் கூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக்கவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.