science

img

ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கியது பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்

ராமநாதபுரம் அருகே பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 


ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கடல் பகுதியில் பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த கடலோர காவல்படைஅந்த உதிரி பாகத்தை மீட்டது.

 ஒடிசாவில் நடைபெறும் ஏவுகணை சோதனையின்போது உதிரி பாகங்கள் வங்காள விரிகுடா கடலில் விழ வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து தற்போது 15அடி நீளமுள்ள பிரமோஸ் ஏவுகணை உதிரிபாகம் தற்போது கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய பாகத்தில் 24 அக்டோபர் 2016 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கடந்த2017ல் பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மீட்கப்பட்ட உதிரிபாகம் பிரமோஸ் ஏவுகணையின் எரிசக்தி பகுதி எனவும் தெரியவந்துள்ளது. 

இதைக்குறித்து இஸ்ரோவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இஸ்ரோ ஒரு குழுவை மறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளது. அதுவரை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அந்த உதிரிபாகம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.