இரவு வானில் உலா, வரும் அழகு நிலா என்றும் மனிதரைக் கவர்ந்திழுக்கும் இயற்கையின் அற்புதம். பூமியின் நிழல் நிலவை மறைப்பதால் நிகழும் முழு மற்றும் பகுதியளவு சந்திர கிரகணங்களும் நம்மைக் கவர்பவை. கிரகணம் தொடர்பாக மூட நம்பிக் கைகள் நம் சமூகத்தில் இன்றும் நிலை நிற் கின்றன. இவை குறித்த விஞ்ஞானரீதியான சேதிகளை பரப்புவதன் மூலம் இவை வானில் இயற்கையாக நிகழ்பவையே என்ற விழிப்பு ணர்வை மக்களிடையில் நம்மால் ஏற்படுத்த முடியும்.
அரிதினும் அரிதான அதிசய நிகழ்வு
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று நிகழவுள்ளது. 580 ஆண்டுக ளுக்குப் பின் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இதனைக் காணமுடியும் என்று கொல்கத்தா எம்.பி.பிர்லா கோளரங்க ஆராய்ச்சி மற்றும் அகாடமியின் இயக்குனர் தேபி பிரசாத் துரை கூறியுள்ளார்.
கிரகண நேரம்
நவம்பர் 19 நண்பகல் 12.48 மணிக்குத் தொடங்கி மாலை 4.17 மணிக்கு நிறைவுறும். இதன் மொத்த கால அளவு 3 மணிநேரம் 28 நிமிடங்கள் 24 விநாடிகள். இந்த அபூர்வ வானியல் நிகழ்வு கடந்த 580 ஆண்டுகளில் இப்போது முதல்முறையாக நிகழ்கிறது. கிர கண சமயத்தில் நிலவு இரத்தச் சிவப்பாகக் காட்சியளிக்கும். கிரகணத்தின் முழு வீச்சு நண்பகல் 2.34 மணிக்கு நிகழும். இதனை அப்போது பூமியில் இருந்து தெளிவாகக் காணமுடியும். அப்போது 97% பூமியின் நிழல் நிலவை மறைக்கும். இந்த அளவு நீண்ட சந்திர கிரக ணம் இதற்கு முன் 1440 பிப்ரவரி 8 அன்று நிகழ்ந்தது. நவம்பர் 19 அன்று நிகழ்வதற்குப் பிறகு இந்த அபூர்வ வானியல் காட்சி 2669 பிப்ரவரி 8இல் ஏற்படும். இதனை இந்தியாவின் வடகிழக்கு பகுதி களில் சில இடங்கள் தவிர வட மற்றும் தென்ன மெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசுபிக் பிரதேசங்களில் நன்றாகப் பார்க்கலாம்.