science

img

அறிவியல் கதிர்

ஏழு சுரங்களுக்குள் எத்தனை உணர்வுகள்?
வேறுபட்ட இசைக்கு மக்கள் எவ்வாறு உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்பதை பெர்க்லி நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக அறிவியலாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். அமெரிக்கா மற்றும் சீனாவில் 2500 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பதிமூன்று விதமான பரந்த உணர்வுகளை இசை தூண்டுவதாக கண்டறிந்துள்ளார்கள். உரையாடக் கூடிய ஒளி வரைபடமாக(interactive audio map) இந்த தரவுகளை மாற்றியுள்ளார்கள். பார்வையாளர்கள் இதன் மீது தங்கள் விரல்களை வைத்து இசைத் துணுக்குகளை கேட்கும்போது எந்த வித உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ராட்சசனின் உயிர்கூறு  
சர்வ தேச ஆய்வாளர் குழு ஒன்று ஆர்க்கிடிய்திஸ் டக்ஸ் எனும் ராட்சச ஈர்க்குக்கணவாயின் (squid) உயிரியல் அடிப்படைகளின்(genome sequence) அடுக்குகளை படி எடுத்துள்ளர்கள். இதன் கண்கள் 10அங்குல விட்டமும் உணர்கொம்புகள் 33அடி நீளமும் கொண்டவை. இதன் மூலம் 30 அடி தூரத்திலுள்ள இரையையும்பிடிக்கும் சக்தி கொண்டவை. இதன் மூளை முதுகெலும்பில்லா வகை விலங்குகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.

சோயா! போயா! 
சோயாபீன்ஸ் எண்ணெய் உடல் பருமன், சர்க்கரை நோய், போன்றவைகளை உண்டாக்குவதுடன் நரம்பு தொடர்பான நோய்களான ஆட்டிசம், அல்செமையர், பதட்டம், மனச்சோர்வு போன்ற நிலைமைகளையும் உண்டாக்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகப் பரவலாக உற்பத்தி செய்யப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் சோயா எண்ணெய்தான் என்று அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.

புற்று நோய்ப் போரில் புதிய ஆயுதங்கள்
ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பம்பாய், கொல்கத்தாவிலுள்ள போஸ் கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புற்று நோய்க்கு புதிய முறை சிகிச்சையை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த முறையில் ஒளிவெப்ப(phototherml) சிகிச்சையும் வேதியியல் சிகிச்சையும்(chemotherapy) இணைக்கப்படுகின்றன. இரண்டு சிகிச்சை முறைகளும் செயல்படும் விதம் வெவ்வேறானபடியால் சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட புற்று நோய் செல்கள் வளரும் சாத்தியப்பாடு குறைகிறது. அதிக அளவில் இல்லாமல் தேவையான அளவிலேயே பயன்படுத்தினால் போதும்  என்பதால் பக்க விளைவுகள் குறைக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. எனினும் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தபின், கீமோ சிகிச்சை தாங்க முடியாத பலவீனமான நோயாளிகளை இந்த முறையில் குணப்படுத்தலாம். 
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக வெப்பத்தை செலுத்துவதன் மூலம் புற்று நோய் செல்களை அழிப்பதே ஒளிவெப்ப சிகிச்சை எனப்படுகிறது. மனித மயிர்களை விட ஒரு லட்சம் மடங்கு சிறிய கொழுப்பு நுண் பொருட்களில்(lipid nano particles) ஒளி உள்வாங்கும் பொருளையும் புற்று நோய் மருந்தையும் இணைத்து உடலில் செலுத்தப்படுகிறது. இந்த கொழுப்பு நுண் பொருள், மருந்துப் பொருட்களை வெளிவிட்ட பிறகு அழிந்துவிடுகின்றன; மேலும் குறைவான நச்சுத் தன்மை உள்ளவை; உடலினுள் பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மருந்தின் சிறப்பு என்னவென்றால் புற்று நோய் செல்கள் மீது செலுத்தப்படும்போது மட்டுமே அவை செயல்படுகின்றன. தற்போதுள்ள புற்று நோய் சிகிச்சைகளின் நோக்கம் சாதாரண மற்றும் நல்ல செல்களை தவிர்த்து புற்று நோய் செல்களை மட்டும் அழிப்பது என்பதால் இந்த ஆய்வு ஒரு நல்ல முன்னேற்றம். புற்று நோய் மிக வளர்ந்த நிலையில் இருந்தாலும் அல்லது நோயாளி மிக பலவீனமாக இருந்தாலும் சிகிச்சை தர முடியாத நிலை உள்ளது. ஆனால் இந்த முறையில் தீவிரமான பக்க விளைவுகள் இல்லாமலும் குறைவான எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சை முறைகள் உள்நாட்டிலேயே கண்டறிந்தவை என்பதால் வெளிநாட்டிலிருந்து வரும் சிகிச்சை முறைகளை விட செலவு குறைவானதும் நம் நாட்டில் உள்ள 22.5 லட்சம் புற்று நோயாளிகள் அணுகக்கூடியதுமாகும். 
from Firstpost by Upchar.com 15.01.2020

நிலவில் காளான் வீடு 
நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கு உலோகம்,கண்ணாடி இவற்றால் ஆன குடியிருப்புகளைக் கட்டுவதற்குப் பதிலாக பூஞ்சைக் காளானிலிருந்து கட்டுமானங்களை உண்டாக்கும் தொழில்நுட்பங்களின் முன்மாதிரிகளை நாசா முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பரிசோதனையில் இலகுவான பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட  கையடக்கமான கட்டுமானங்களை விண்வெளி வீரர்கள் எடுத்து செல்வார்கள். அதில் பூஞ்சைக் காளான்கள் உறக்க நிலையில் இருக்கும். தண்ணீர் சேர்க்கும்போது பூஞ்சைக் காளான்கள் சட்டகங்களை சுற்றி வளர்ந்து ஒரு குடியிருப்பு உருவாகும்.

 

;