science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

 1 ) வெளிவரும் கார்பன் அபாயம் 

பல்லாயிரக்கணக்கான  ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்த செம்மரங்களும் முறுக்கி வளர்ந்த அலையாத்திக் காடுகளும் சதுப்பு நிலங்களும் கோடிக்கணக்கான டன் கார்பனை பூமிக்கடியில் தேக்கி வைத்துள்ளன. காடுகளை அழிப்பது, சதுப்பு நிலங்களை அகழ்வது போன்ற செயல்களால் இம்மாபெரும் கார்பன் சேமிப்பு வெளிவிடப்படுமானால் புவி வெப்பமடைவது அதிகரிக்கும்.இவற்றை மீட்டெடுப்பபதற்கு தேவைப்படும் காலம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகும். எனவே இதை பூமிக்கடியிலே வைத்திருப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.  இப்போது விஞ்ஞானிகள் சதுப்புநிலத்திலும் அலையாத்திக் காடுகளிலும் வெப்பமண்டலக் காடுகளிலும் மற்ற பகுதிகளிலும் புதைந்திருக்கும் கார்பனின் அளவை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். செயற்கைக்கோள் தரவுகளையும் இந்த மதிப்பீடுகளையும் இணைத்து மனித குறுக்கீடுகளினால் இவை எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் எந்தப் பகுதி பதுகாக்கப்பட வேண்டும் என்பதையும்  கண்டிருக்கிறார்கள்.

2 ) 2 மணிநேரத்தில்  ஒமைக்ரான் சோதனை

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) ஒமைக்ரான் கொரோனா நுண்கிருமியை 2மணி நேரத்தில் கண்டறியும் சோதனைக் கருவியை உண்டாக்கியிருக்கிறது.இப்போதுள்ள சோதனைகள் கிருமியின் மரபணு பகுதி சோதனைக்கு 36 மணி நேரமும் முழுச் சோதனை க்கு 4-5நாட்களும் எடுத்துக்கொள்கின்றன என்கிறார் ஆய்வுக் குழுவின்  தலைவரான மரு.பிஸ்வா ஜோதி போரகோட்டி. இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் உள்ளனர்.

3 ) புவிவெப்பமாதலும்  பறவைகள்  எடை குறைவும்

கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர் ஜிரிநெக் மற்றும் அவரது குழுவினரும் 1979 ஆம் ஆண்டிலிருந்து  2019 வரை அமேசான் காடுகளிலுள்ள வலசை போகாத பறவைகள் குறித்த தரவுகளை சேகரித்த னர். 77 இனங்களை சேர்ந்த 11000 பறவைகளின் எடை மற்றும் சிறகுகளின் நீளம் இவற்றில் அடங்கும். அந்தப் பகுதியின் தட்ப வெப்ப மாறுதல் குறித்தும் தரவுகள் சோதிக்கப்பட்டன. காடுகளின் தரையில் பூச்சிகளை உட்கொள்ளும் இனங்கள் முதற்கொண்டு மரங்களிலுள்ள பழங்களை உண்ணும் பறவைகள் வரை எல்லா இனப் பறவைகளும் இந்த காலத்தில் எடை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த காலத்தில் மழைப்பருவத்தில்  சராசரி யாக 1O   செண்டிகிரேடும்  கோடைகாலத்தில் 1.65O செண்டிகிரேடும் வெப்பம் உயர்ந்துள்ளது. எனவே பறவைகளின் உடலில் ஏற்பட்டுள்ள  இந்த மாற்றங்கள் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையது எனத் தெரிகிறது. வறட்சியான பருவநிலை பறவைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிக வெப்பம் மற்றும் வறட்சியான பருவநிலைகளுக்கு பிறகு  வரும் ஓரிரு ஆண்டுகளில் பறவைகளின் எடை குறை வது அதிகமாகிறது. உணவுப் பற்றாக்குறையி னாலும் பறவைகளின் எடை குறையலாம். ஆனால் இந்தச் சோதனையில் பலவகைப்பட்ட உணவுப் பழக்கங்கள் கொண்ட பறவைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டதால் அவற்றின் எடை குறைவிற்கு  பருவநிலை மாற்றங்களே காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஜிரிநெக் கூறுகிறார்.

4 ) வானத்திலிருந்து வகுப்பு

சீனாவில் ஐந்து நகரங்களிலுள்ள மாணவர்கள் ஒரு இணைய வகுப்பில் கலந்து கொண்டார்கள். வகுப்பை நடத்தியவர்கள் சீன விண்வெளி வீரர்கள். சீனாவால் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்திலிருந்து இந்த வகுப்பு நடத்தப்பட்டது.விண்வெளியில் வாழும் நிலைமைகள்,பொருள்கள் இயங்கும் முறை போன்றவை விளக்கப்பட்டது. விண்வெளிநிலையத்தை மெய்நிகர் சுற்றுப் பயணமாக மாணவர்களுக்கு காட்டப்பட்டது. விண்வெளி நிலையத்திலுள்ள ஒரே பெண்மணி வாங் யாப்பிங் முக்கிய விரிவுரையாளராக  இந்த வகுப்பை நடத்தினார்.

5 ) இஸ்ரோவின் புதிய திட்டம் 

நேவிக் (NavIC- Indian Regional Navigation Satellite System) என்கிற செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.இதன் மூலம் நடை பெறும் தகவல் தொடர்புகளை கைபேசி தொழில் நுட்பத்துடன் இணைப்பதற்காக ஓப்போ என்கிற கைபேசி தயாரிக்கும் நிறுவனத்துடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்தியப் பய னாளர்களின் தேவைகளை  மனதில் கொண்டு இது செயல்படும்.

6 ) எங்கே போனது பீட்டா?

உலக அழகிப் போட்டி கள் போல பறவை களை வைத்து நடத்தும் பாட்டுப் போட்டிகள் குறித்து அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள் ளார்கள். இந்த ஆய்வின் மூலம் 22 நாடுகளில்  36 வகை பறவை இனங்களைக் கொண்டு போட்டிகள் நடப்பது தெரிய வந்துள்ளது.இதில் ஆண் பறவைகள் பாடவும் சிறகுகளை விரிப்பதும் நடந்து காட்டுவதும் செய்ய வைக்கப்படுகின்றன. இந்த இனங்களில் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கும் இத்தகைய போட்டிகளுக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

7 ) நெருப்புக்கோழியாகும் மனிதர்கள்

ஜப்பான் நாட்டு அறிவிய லாளர்கள் நெருப்புக்கோழி யின் நோய் எதிர்ப்பு (antibodies) புரதத்தைக் கொண்டு முகக்கவசம் தயாரித்துள்ளார்கள். கொரோனா கிருமியை கண்டறிந்த வுடன் புற ஊதாக்கதிர்களின் கீழ் இவை ஒளிரும். இதற்கு முன்  நடைபெற்ற ஆய்வுகளில் பறவைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளதாகத் தெரிந்ததன் அடிப்படையில் நெருப்புக்கோழியின் நோயெதிர்ப்பு புரதத்தை பயன்படுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தில் எந்தவித ஒளியும் இல்லாமலேயே கிருமியைக் கண்டறிந்தவுடன் ஒளிரும் முகக்கவசங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


 

;