லிகோவில் இணையும் இந்தியா
ண்வெளியில் மிகப்பெரும் கோள்களின் இயக்கங்களால் ஏற்படும் சுழல்களை அறியும் சோதனைச்சாலைகளின் வலைப்பின்னல் கள் LIGO (Laser Interferometer Gravitational-Wave Observatory) என அழைக்கப்படுகிறது. இதில் இந்தியாவும் இணைவதற்கான அனுமதியை அரசு அளித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணையும் ஐந்தா வது கண்ணி இந்தியாவாகும்.
வயதான வவ்வாலுக்கும் செவித்திறன் குறைகிறது
வவ்வால்கள் செவித்திறன் குறைபாடு இல்லாதவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவையும் மூப்படையும் போது செவித் திறனை இழக்கின்றன என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 47 பழ வவ்வால்களின் செவித்திறனை அறிவதற்காக மூளையில் உள்ள செவியுணர்வுப் பகுதியின் செயலை உட்செவி மைக்ரோபோன் இயல் மூலம் அளவிடப்பட்டது. மனிதர்களைப் போலவே அவைகளுக்கும் ஒரு வருடத்திற்கு 1 டெசிபல் அளவு கேட்கும் திறன் குறைகிறது என்பது இந்த சோதனையில் தெரிய வந்துள்ளது
விண்ணில் ஒரு சிவப்பு வட்டம்
மத்திய இத்தாலிப் பகுதியில் மார்ச் 27ஆம் தேதியன்று வானில் பெரும் சிவப்பு வட்டம் ஒன்றை மக்கள் கண்டனர். பொஸ்ஸங்கோ நகரிலிருந்து புகைப்படக் கலைஞர் வேலர் பினாட்டோ இதை படம் பிடித் துள்ளார். இது மின்காந்த துடிப்புகளி னால் ஏற்படும் ஒளி உமிழ்வு மற்றும் கீழ் அலைவரிசை அதிர்வுகள் ஆகும். இது எல்வ் Elve, Emissions of Light and Very Low-Frequency Perturbations எனப்படுகிறது.
மீனில் வானவில் வண்ணங்கள்
கோஸ்ட் கேட் பிஷ் எனப்படும் மீன்கள் ஒளி ஊடுருவக்கூடிய உடலைப் பெற்றிருக்கின்றன. அவற்றின் வழியே ஒளி செல்லும்போது அவை வண்ணமயமாக மாறுகின்றன. இதற்கான காரணத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒளியை சிதறடிக்கக்கூடிய இயல்பை பெற்றிருக்கும் பல மீன்கள் அவற்றின் தோலில் அல்லது செதில்களில் சிறு படிகங்களை பெற்றிருக் கின்றன. அவை ஒளியை பிரதிபலிக்கின்றன.ஆனால் கேட் பிஷ் மற்றும் அது போன்ற ஒளி ஊடுருவக்கூடிய நீர் வாழ் இனங்களான லார்வாப் பருவ விலாங்கு, ஐஸ் மீன் ஆகியவை இத்தகைய படிகங்களை பெற்றிருக்கவில்லை. ஐந்து செ.மீ. நீளமுள்ள இவை பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுபவை. இவற்றின் வண்ணங்களை ஆய்வு செய்வதற்காக ஷாங்காய் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சாவோவும் அவரது குழுவினரும் வெவ்வேறு விதமான ஒளி அமைப்புகளில் அவற்றை கவனித்தனர். அதன் வண்ண மாறுதல்கள் ஒளி ஊடுருவு வலினாலேயே ஏற்படுகிறது; ஒளிச் சிதறினால் அல்ல என்று தீர்மானித்தனர். வெண்ணிற லேசர் கற்றையினால் அதன் சதைகளையும் தோலையும் தனித்தனியே ஒளிரச் செய்தனர். சதைகளே பல வண்ண ஒளிர்விற்கு காரணம் என்று கண்டனர்.
அந்த சதைகளின் அமைப்பை ஆய்வதற்காக அதிலிருந்து எக்ஸ் ரே கதிர்கள் எவ்வாறு சிதறடிக்கப்படுகின்றன என்பதை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் கண்டனர். அதன் சதைகளில் சீரான இடைவெளிகளில் 3 மைக்ரோமீட்டர் நீளமுள்ள சேக்ரோமியர்ஸ் எனப்படும் கட்டங்கள் காணப்பட்டன.இதுதான் அதன் ஒளிர்விற்கு காரணம். இந்தக் கட்டங்கள் வெவ்வேறு அளவுகளில் ஒன்றை யொன்று மேலடுக்கும் புரதங்களால் ஆனது. இந்த அடுக்குகள் ஒளியை வளைத்து வெவ்வேறு அலைவரிசைகளை பிரித்தும் அதிகப்படுத்தவும் செய்கின்றன. இதன் ஒட்டுமொத்த ஒளிமுறிவு வண்ணக்கற்றைகளை உருவாக்குகிறது. மீன்கள் நீந்துவதற்காக தசைகளை சுருக்கி நீட்டும்போது இந்த கட்டங்களின் நீளம் மாறுகிறது. வானவில் போன்ற வண்ண மாறுதல்களும் ஏற்படுகின்றன. கோஸ்ட் கேட் மீன்களின் இந்த ஒளிரும் இயல்பின் பயன் என்ன என்பது தெளிவாகவில்லை. இவை கலங்கலான நீரில் வாழ்கின்றன. அவை பார்வையை துணை கொள்வதில்லை. ஆனால் கூட்டமாகச் செல்லும்போது அவற்றின் இயக்கத்தை ஒருங்கிணைக்க இது உதவி செய்யலாம். அல்லது பளபளப்பான நீருடன் ஒன்றிணைந்து நிலத்திலிருந்து வரும் பறவைகளிடமிருந்து தப்பிக்க உதவலாம் என்கிறார் சிங்கப்பூரை சேர்ந்த மீனியலாளர் ஹியோக் ஹீ நிக்.