science

img

5 வயதிலிருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும்!

திருச்சி மாவட்டம் திருவானைக் காவலில் பிறந்து, உலக அறி வியல் அறிஞர்கள் பட்டியலில்  இடம்பிடித்த தமிழர்,  சர் சி.வி.ராமன்.  படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்லநினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளி நாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை.எனவே இந்தியா வில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார். அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவி களை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். வங்கத்தின் ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லா வுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார். கடல் வழி யாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததன் விளை வாக எழுந்ததே, ராமன் விளைவு.  கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பன வற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில்  அவர்களின் பெயரையே முன்னிலைப் படுத்தி வெளியிடுவார். ‘அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படி யாகக் கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வதே’’ என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார். ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது,  அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பி னார்கள். அங்கே சென்றவர்,  ‘ஆங்கிலேயரின் அடிமைப்படுத்த லைத் தொடர்ந்து எதிர்க்கும் விடு தலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே  தன்னுடைய உரையை வழங்கினார். ‘ஐந்து வயதில் இருந்தே பிள்ளை களை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறி வியலில் நாம் ஒளிர முடியும்’’ என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய  அறிவியல் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

ஆனால் இந்தியாவில் எட்டாண்டு களுக்கும் மேலாக அறிவியலுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. கொரோனா காலத்தில் மக்களைக் காக்க உரிய சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடாமல் ஒன்றிய அரசே “விளக்கேற்றுங்கள், கை தட்டுங்கள். கொரோனா ஓடிவிடும்” என அறிவிய லுக்கெதிராக செயல்பட்டது ஒன்றிய அரசு. வயதான பசுக்களை விற்பனை செய்யும் உரிமையைப் பறித்து பசு  உரிமையாளர்களைப் பசு குண்டர் களை வைத்து அடித்தே கொன்று வரு கிறது பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள்.  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுவின் சிறுநீரைப் பொது வெளியில் குடிப்பதும் அவ்வாறு மக்களைச் செய்ய ஊக்கப்படுத்துவது மான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. விஞ்ஞானிகள் நிறைந்த அறி வியல் மாநாட்டிலேயே பிரதமர் மோடி, விநாயகருக்கு யானைத்தலையும் மனித உடலும் பொருத்தும் ஞானம் அக்காலத்திலேயே இருந்தது என கதை அளந்தார். அக்காலத்திலேயே புஷ்பக விமானங்கள் இருந்தன என்றும் பொய்யுரைத்தார். பசுவின் சிறுநீர் கோமியமாகவும் பஞ்ச கவ்ய மாகவும் தயாரித்து அஞ்சல் நிலை யங்களில் விற்கும் கொடுமை நடந்து வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் கள மாடிய மருத்துவர் நரேந்திர தபோல்கர், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதியும் பேசியும் வந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் சனாதன வாதி களால் படுகொலை செய்யப்பட்டதும் இன்றளவும் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்காததும் அறிவியலுக்கு எதிரான அம்சங்களே. இந்நிலையில் அறிவியலுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்ப தும் அறிவியலை வாழ்வியலோடு இணைப்பதைக் கற்பிப்பதும் காலத்தின் அவசியம்.

- பெரணமல்லூர் சேகரன் 
பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் நாள்

;