politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- குடியுரிமைச்சட்டம் இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல.
ச.சா - பிரச்சனை என்னென்னா, மத ரீதியா இந்திய மக்கள் யாருன்னு முடிவு பண்ணுறதுதான..!!
 

மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் :- அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ச.சா - அதனாலதான் பயங்கரவாதிகள் மூ்ணு பேர ஜஸ்வந்த்சிங் கூட அனுப்பி வெச்சோம்னு சொல்வாங்களோ..??
 

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்:- தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும் தீவிரவாதம்தான்.
ச.சா - மத்திய அரசச் சொல்றாரோ..??
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- அகமதாபாத் செல்லும்போது ஒரு கோடிப்பேர் என்னை வரவேற்பார்கள்.
ச.சா - அவ்வளவு இருக்குதோ இல்லையோ, திரும்பிப்போ டிரம்ப்னு முழக்கம் போடுறவங்க எண்ணிக்கை நாடு முழுக்க பல கோடி இருக்குமே..!!

;