politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீடிப்பு.
ச.சா - உரிய நேரத்துல நீதி கிடைக்குமா..?
 

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தோரத்:- பாஜகவைத் தடுக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்.
ச.சா - சிவசேனாவும் பேரம் பேசுறதுக்காக எதிர்க்கட்சிகளப் பயன்படுத்த நினைக்குதே..??
 

பாஜக தலைவர் அமித் ஷா :- எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்தினால் நாடு தானாக முன்னேறும்.
ச.சா - மாசடைந்த நகரங்கள் பட்டியல்ல வாரணாசி முதல் இடத்துல இருக்குதச் சொல்றாரோ..??
 

அமெரிக்கா :- இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது.
ச.சா - சொல்றதெல்லாம் இந்தியா கேட்டா, அதுக்குப் பேரு நல்லுறவா..??

;