politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- பாஜக அரசு பேசுவதற்கும், செயல்படுவதற்கும் வேறுபாடு இல்லை.
ச.சா - உண்மைதான்.. வருமானம் போகும்னு தெரிஞ்சே பணக்காரர்களுக்கு வரிவிலக்கு குடுத்தோம்னு வெளிப்படையாவே சொல்றாங்களே..!!
 

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் :- சினிமா டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.
ச.சா - இதக் கவனிக்குறதுக்கா மக்கள் ஓட்டுப் போட்டாங்க..!!
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் :- தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சி.
ச.சா - இல்லேனு அதிமுககாரங்க யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே..!!
 

அகாலிதளத் தலைவர் சுக்பீர்சிங் பாதல் :- அரியானாவில் பாஜக எதிர்க்கட்சியாக மாறும்.
ச.சா - கூட்டணிக்கட்சியே இப்புடி சொல்லுதே..?!!

;