politics

img

மம்தாவின் அரசியல் கொள்கையால் மேற்குவங்கத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: ஆளுநர் திரிபாதி

கொல்கத்தா, ஜூலை 28- சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்து வதாகக் கூறும் முதல்வர் மம்தா பானர்ஜி யின் அரசியல் கொள்கையால், மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று அந்த மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தெரிவித்துள் ளார். மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் திரிபாதி விரைவில் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, அந்தப் பதவியில் ஜெகதீப் தன்கரை மத்திய அரசு அண்மையில் நிய மித்தது. வரும் 30-ஆம் தேதி நடைபெறும் விழாவில் மேற்கு வங்க ஆளுநராக தன்கர் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “முதல்வர் மம்தா பானர்ஜி தொலைநோக்குப் பார்வை கொண்டவர். தனது முடிவுகளை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவர் அவர். சில நேரங்களில் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார். இதை அவர் கட்டுப்படுத்த வேண்டும். சிறுபான்மையினரைத் திருப்திப்படுத் தும் விதமான அவரது அரசியல் கொள்கை யால், சமூக நல்லிணக்கம் மிகவும் பாதிக்கப் படுகிறது. மாநிலத்திலுள்ள மக்களை எந்தவித பாகுபாடும் இன்றி, அவர் ஒரே மாதிரி யாக பாவிக்க வேண்டும்” என்றார். மேற்கு வங்கத்தில் பாகுபாடு நிலவு வதைக் காண்கிறீர்களா என கேசரிநாத் திரிபாதியிடம் கேட்டபோது, “பாகுபாடு நிலவுவது வெளிப்படையாகவே தெரிகிறது; மம்தாவின் கருத்துகளை பார்த்தால், அதைத் தெரிந்து கொள்ளலாம். மேற்குவங்கத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் கவலை யளிக்கிறது. இது மேம்படுத்தப்பட வேண்டும்.  வன்முறைப் பாதையை மக்கள் ஏன் ஏற்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு அரசியல், மதம், வங்கதேச மக்கள், ரோஹி ங்கயாக்கள் அல்லது பிற நிலவரங்கள் காரணமாக இருக்கலாம் ‘ என்றார். மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு திரிபாதி நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிக்கையில், “சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும்.  இது உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகளி லும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலம் சம்பந்தப்பட்டது. அதற்காக, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, சட்டம்-ஒழுங்கு நிலையை மட்டும் காரணமாகத் தெரிவிக்க இயலாது’ என்றார்.

;