politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக மாற்ற சிறப்புப் படை அமைத்திருக்கிறோம்.
ச.சா - இருக்குறதே கிழிஞ்சு தொங்குது.... அதுக்கு என்ன பண்ணப் போறீங்க..?!?
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :- 41 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.
ச.சா - புதிய தொழில்கள் துவஙகுமா..?!?
 

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் :- காஷ்மீர் மக்களின் நல்வாழ்வுக்காகவே முடிவெடுத்தோம்.
ச.சா - நல்வாழ்வுக்கான அறிகுறி எதுவுமே கிடைக்கலியே..?!?
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க உதவி கேட்டால் செய்யத் தயார்.
ச.சா - வேண்டாம்னு சொல்லியாச்சே.. அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப கேக்குறாரு..?!?