politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- இந்தியாவில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
ச.சா - வரியெல்லாம் கட்டாம ஓடிப்போறதுனால சொல்றாரோ..??
 

செய்தி :- பாஜக எம்.பி. மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி கைது.
ச.சா - சட்டம் தன் கடமையைச் செய்யும்னு சொன்னது இதுவா..??
 

தரைப்படைத் தளபதி பிபின் ராவத் :- காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
ச.சா -  அங்க மக்கள் நடமாட்டமே இல்லையே..??
 

செய்தி :- பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.
ச.சா - பொறியியல் படிப்பெல்லாம் விருப்பப்பாடமாவும், பகவத்கீதை கட்டாயப்பாடமாவும் மாறிடுமோ..??

;