politics

img

தாமரை மலராமல் போனதற்குக் காரணம்

பிரதமர் மோடி செய்துள்ள எண்ணற்ற சாதனைகளைச் சொல்லிஓட்டு கேட்டால் மக்கள் எங்களை வெற்றி பெறச்செய்வார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தோம். அதனால்கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டாலும் தாமரை மலரும் என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தோம்.ஆனால் தமிழகத்திலேயே ஒரு கட்சி, தாயில்லாப் பிள்ளையாக தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு தாயாக நானும் மோடியும் மனம்பொறுக்க முடியாமல் உதவி செய்ய நினைத்தோம். தாயற்ற அந்தக் கட்சியை எப்படியாவது காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டோம். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போது உணர்கிறோம். குளத்தில் விழுந்தவரை காப்பாற்றக் கை கொடுக்கப் போய் கை கொடுத்தவன் குளத்தில் விழுந்த கதையாகிவிட்டது எங்கள் நிலைமை.ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்ததாலேயே மக்கள் எங்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டனர். அவர்கள் மீது மக்கள் கோபத்திலும் இருந்தார்கள் என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டோம். அவர்கள் மீது பரிதாபப்பட்டதால் எங்கள் நிலைமை பரிதாபமாகிவிட்டது. ‘தாயில்லாப் பிள்ளைக்கு’க்கூட இனி மனம் இரங்கக்கூடாது என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தல் முடிவு எங்களைத் தள்ளிவிட்டது. பரிதாபப்படாமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால் ஐந்து தாமரைகளை இப்போது கையில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு உங்களுக்குப் பேட்டியளித்திருப்பேன்?


ஐ.வி.நாகராஜன்

;