politics

img

பொன். ராதாகிருஷ்ணன் போட்ட போடு: தடுமாறும் ரெட்டை பாதை திட்டங்கள்

தமிழகத்தில் 8 ரெட்டை பாதைத் திட்டங்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் முடிய மொத்த தேவை ரூ.5342 கோடியாகும். ஆனால் ஐந்தாண்டுகளில் செய்த செலவு வெறும் ரூ.1267 கோடியாகும். நான்கில் ஒரு பங்குதான். இன்னும் ரூ.4075 கோடி செலவு செய்தால் தான் இந்த திட்டங்கள் முடிவடையும். திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடியின் அமைச்சர்கள் செய்யும் விளம்பரங்களுக்கு எந்த குறைச்சலுமில்லை. ஆனால் முடிந்ததா என்று பார்த்தால் தான் குட்டு வெளிப்படும். பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரிக்கு செய்த சேவை மதுரை - கன்னியாகுமரிக்கு ரெட்டை பாதைத்திட்டங்கள்என்று தம்பட்டம் அடிக்கப்பட்டது. மதுரை- மணியாச்சி - தூத்துக்குடி, மணியாச்சி- நாகர்கோவில், கன்னியாகுமரி- திருவனந்தபுரம் ஆகிய மூன்று ரெட்டைப் பாதை திட்டங்களும் 2015-16ல் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டன. 2022ல் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது திறந்து வைக்கப்படும் என்று தண்டோரா போட்டார்கள்.2019-20 பட்ஜெட்டுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை ஒதுக்கப்பட்ட தொகை ரூ.785 கோடிதான். மொத்த தேவை ரூ.3618 கோடி. ஆண்டுக்கு ரூ.700 கோடி ஒதுக்கவேண்டிய திட்டத்திற்கு ஐந்தாண்டிலேயே ஒதுக்கப்பட்ட தொகை ரூ.785 கோடிதான். இப்படி சொற்பமான தொகையை ஒதுக்கினால் எப்படி 2022ல் இந்த திட்டங்கள் முடிவடையும்/ இதுதான் பொன்னாரின் பொய்யும் புரட்டும்.


தமிழக ரெட்டைப்பாதைத் திட்டங்கள் ஆண்டு 5 ஆண்டு செலவு மொத்த தேவை


1. தாம்பரம் - செங்கல்பட்டு 3வது லைன் 2006-07 ரூ.127.60 கோடி ரூ.951 கோடி


2. ஓமலூர்- மேட்டூர் அணை 2011- 12 ரூ.122.55 கோடி ரூ. 232 கோடி


3. சென்னை பீச் - அத்திப்பட்டு 4வதுலைன் 2003-04 ரூ.83 கோடி ரூ.258 கோடி


4. பீச்-கொருக்குப்பேட்டை 3வது லைன் 2003-04 ரூ.89.61 கோடி ரூ. 168 கோடி


5. திருவனந்தபுரம்- கன்னியாகுமரி 2015-16 ரூ.244 கோடி ரூ.1432 கோடி


6. மதுரை-மணியாச்சி- தூத்துக்குடி 2015- 16 ரூ.255 கோடி ரூ.1182 கோடி


7. மணியாச்சி- நாகர்கோவில் 2015- 16 ரூ.286 கோடி ரூ.1004 கோடி


8. சேலம்-ஓமலூர் 2017 -18 ரூ.60.08 கோடி ரூ.115 கோடி


             

மொத்தம் ரூ.1267.84கோடி ரூ. 5342 கோடி




இதற்கு ஆதாரம் வேண்டுமா? அதிமுக மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.செந்தில்நாதன், ஆர்.கே.பாரதிமோகன் ஆகியோருக்கு மக்களவையில் 26.12.2018 அன்று ரயில்வே அமைச்சர் அளித்த பதிலை பார்க்கவும்.ரயில் பாதைகள் அதிகரித்தால் தொழில் வளரும். தொழில் வளர்ந்தால் வேலைவாய்ப்பு உருவாகும். இதில் எல்லாம்அக்கறையற்ற மோடி அரசுக்கும் அதன்கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் ஏன் வாக்களிக்கக்கூடாது என்பது தெரிகிறதா?


ஆர்.இளங்கோவன்













;