politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது.
ச.சா - ஸ்டேட் வங்கி இணைப்புலயும் இப்புடித்தான் சொன்னீங்க.. ஆனா நிறைய கிளைகள இழுத்து மூடிட்டீங்க..!!
 

மத்திய அமைச்சர் அமித்ஷா :- காஷ்மீர் ஒட்டுமொத்தமாக அமைதியாக இருக்கிறது.
ச.சா - எந்த ஜனநாயக உரிமையும் இல்லாமதான..!!??
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சிப்பது கீழ்த்தரமான அரசியலாகும்.
ச.சா - முதலீட்டாளர் மாநாடு பற்றி கேள்வி கேட்டா கீழ்த்தரமா..? எவ்வளவு முதலீடு வந்துதுன்னு சொல்லிட்டா பிரச்சனை இல்லையே..??
 

மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் :- பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் இணைப்பு அவசியம்.

ச.சா -பிரச்சனைய திசைதிருப்புறதுல அமைச்சர விட வேகமா இருக்கீங்களே..??

;