politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மோடி உங்களின் ‘அந்த’ கண்ணாடியை கழற்றுங்கள்

‘‘ஆற்றில் உடல் கள் மிதக்கின்றன. மருத்துவமனையில் கிலோ மீட்டர் கணக் கில் வரிசையில் நிற் கின்றனர். உயிர் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள் ளது. நீங்கள் சென்ட்ரல் விஸ்தாவை மட்டும் பார்க்கிறீர்கள். அந்த கண்ணாடியை கழற்றிவிட்டு மற்றவற்றையும் பாருங்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவால் மக்கள் செத்து விழும் போது, பிரதமர் மோடி ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதையே இவ்வாறு ராகுல் விமர்சித் துள்ளார்.

                                      ***************

11 பேர் குடும்பங்களுக்கு  தலா ரூ.10 லட்சம் நிதி

திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் திங்களன்று இரவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பரிதாபமான முறையில் உயிரிழந்தனர். இந் நிலையில், உயிரிழந்த அந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் தலாரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

                                      ***************

உயிரிழந்தோர் குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் 

‘நாடாளுமன்றத் தையும் ஊடகங்களையும் எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுகிறார். கல்லறைகளையும், சுடுகாடுகளையும் பற்றி அவர் பல மணி நேரம் பேச முடியும். ஆனால் மருத்துவமனைகளைப் பற்றி ஒருவார்த்தை கூட பேச முடியாது என்று மஜ்லிஸ் கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். ஆக்சிஜன், படுக்கைகள் பற்றாக்குறையால் தங்களின் அன்புக்குரியவர் களை இழந்த மக்களிடம் பிரதமர் மன் னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

                                      ***************

ஹரியானா அரசு ரூ. 5,000 நிவாரணம்!

ஹரியானா மாநிலத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்ததிட்டம், விரைவில் அமலுக்கு வரும் என்றுஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

                                      ***************

எதிர்க்கட்சித் தலைவராகும் சுவேந்து அதிகாரி..!

மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜகஎம்எல்ஏக்களின் கூட் டம், கொல்கத்தாவில் மத்திய சட்டத் துறைஅமைச்சர் ரவிசங்கர்பிரசாத் முன்னிலையில் திங்களன்று நடைபெற்றது. இதில்,பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக, நந்திகிராம் தொகுதியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

;