politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

இலவச ரேசன்: கேரளா உள்பட 3 மாநிலங்கள் கோரிக்கை!

கடந்த ஆண்டைப் போலவே, இந்தாண் டும் ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என ராஜஸ் தான், உத்தரகண்ட், கேரளா ஆகிய 3 மாநிலஅரசுகள் வலியுறுத்தி உள்ளதாக மத்தியஉணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினோய் விஸ்வம், என்சிபி தலைவர் சரத்பவார், திரிணாமுல் தலைவர் சவுகதா ராய் உள்ளிட்ட எம்.பி.க்களும் இதே கோரிக்கைக்காக கடிதம் எழுதி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

                          ***********

தடுப்பூசி கொள்முதலில் மாநிலங்களுக்கு சுதந்திரம்

‘கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில், மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுதந்திரமான முறையில் அவர்களே தடுப்பு மருந்துகளை வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும்’ என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேகோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர் பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்ஒன்றையும் எழுதியுள்ளார்.

                          ***********

கடன் தவணை வசூலை நிறுத்தி வையுங்கள்!

‘கொரோனா ஊரடங்குகள் காரணமாக, மகாராஷ்டிர மக்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளதால், வங்கிக் கடன் தவணை வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலுவையில் உள்ள சிறு,நடுத்தர மற்றும் பிற வணிக நிறுவனங் களின் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க வேண்டும்; இதுதொடர்பாக வங்கிகள், நிதிநிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண் டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

                          ***********

நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப் படுத்தும் முயற்சியாக அம்மாநில அரசு சமீபத்தில் ‘பிரேக் தி செயின்’(Break the Chain) என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதனொரு பகுதியாக, ரூபாய் நோட்டுக் களை அச்சடிக்கும், நாசிக் நாணய பாதுகாப்பு பதிப்பகம் மற்றும் இந்திய பாதுகாப்பு பதிப்பகத்தில் (Nashik’s Currency Security Press and IndiaSecurity Press) ரூபாய் நோட்டுக்களைஅச்சிடும் பணி, ஏப்ரல் 30 வரை நிறுத் தப்பட்டுள்ளது. நாசிக் பதிப்பகத்தில் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                          ***********

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட உ.பி. பாஜக கவுன்சிலர்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் பாஜக கவுன்சிலராக இருப்பவர் மனீஷ் சவுத்ரி (38). இவர், கன்கர்கேடா பகுதியில், காருக்குள் அமர்ந்த வாறு தன்னைத்தானே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு, தற் கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும்,அவரது குடும்பத்தினர் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளதால், அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

;