politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பாக். எல்லை அருகே பிடிபட்ட  புறா மீது வழக்குப்பதிவு?

பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து, மொபைல் எண் எழுதப்பட்டிருந்த துண்டுச் சீட்டுடன் பறந்துவந்த புறா மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், புறா ஒரு பறவை என்பதால் அதன் மீது முதல் தகவல் அறிக்கைபதிவு செய்ய முடியுமா? என தெரியவில்லை. எனினும் இதுதொடர்பாக சட்டத்துறையினரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித் துள்ளனர்.

                                         ******************

இலவச தடுப்பூசித் திட்டம் அறிவித்த 5 மாநிலங்கள்!

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மத்திய அரசுஅனுமதி அளித்துள் ளது. எனினும் மாநிலங்களுக்கான தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு எந்த உத்தரவாதத்தையும் அது அளிக்கவில்லை. இந்நிலையில், கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் ஆகிய 5  மாநிலங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன. 

                                         ******************

மோடி ஏற்படுத்திய பேரழிவே கொரோனா 2-வது அலை!

‘இந்தியாவில் கொரோனாவின் 2-வதுஅலை மிகவும் வீரியமாக உள்ளது. ஆனால், தடுப்பூசியோ, ஆக்சிஜனோ எங்கும் இல்லை. இந்த பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு இருக்கும் அதேவேளையில், தடுப்பூசியும், மருந்துகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, கொரோனா 2-ஆவது அலையை மோடி ஏற்படுத்திய பேரழிவு என்றுதான் நான் கூறுவேன்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

                                         ******************

ஆட்டோவில் கட்டி எடுத்துச் செல்லப்படும் உடல்கள்!

குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில், கொரோனாவால் உயிரிழப்போரை எடுத் துச் செல்வதற்கான வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உயிரிழந்த ஒருவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் ஆட்டோவின் மேல்  வைத்து கட்டி எடுத்துச்சென்றஅவலம் அரங்கேறி உள்ளது. 

                                         ******************

இறந்தவர்களை எரிக்க கர்நாடகத்தில் டோக்கன்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள், கர்நாடக சுடுகாடுகளுக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், அனைத்து உடல்களையும் உடனடியாக எரிக்க முடியாத நிலையில், அவை வரிசையில் காத்திருக்கின்றன. இதையடுத்து, சுடுகாட்டுக்கு வரும் இறந்தவர்களின் உடல்களை சுழற்சி முறையில் எரிக்க அங்குடோக்கன் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டு உள்ளது.

;