politics

img

பிரதமர் மோடி இந்துவா? இந்துத்வவாதியா? என்றைக்கு உண்மையைப் பாதுகாத்திருக்கிறார்? கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் காந்தி

அமேதி 
அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தற்போதே உத்தரபிரதேச களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  அமேதி தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 

பொதுக்கூட்டத்தில் இந்து, இந்துத்வவாதி ஆகிய இரு பொருளுக்கு விளக்கம் அளித்து பிரதமர் மோடியை மறைமுகமாக வறுத்தெடுத்துள்ளார். பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது,"நாட்டில் இந்து மதம் குறித்து நிறைய பேசப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்து மற்றும் இந்துத்வவாதிக்கு இடையிலான போராட்டம்தான் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்துக்கள் எப்பொழுதும் உண்மைப் பாதையைத் தேர்ந்தெடுப்ப்பார்கள். அனால் இந்துத்வவாதிகள் வெறுப்பை பரப்பி அதிகாரத்தைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 

முக்கியமாக இந்துத்வவாதி கங்கையில் தனியாக நீராடுவான். இந்து கங்கையில் கோடிக்கணக்கானவர்களுடன் நீராடுவான். இந்து உண்மையைக் கண்டறிந்து, புரிந்துகொண்டு, உண்மைக்காகப் போராடுவதற்காகவே தனது வாழ்நாளை செலவிட்டு தனது அச்சத்தை எதிர்கொள்வான். ஒருபோதும் வெறுப்பாகவோ, கோபமாகவோ அல்லது வன்முறையாகவோ மாற்ற மாட்டான். இந்துத்வவாதி பொய் அரசியலில் ஈடுபடுவான்.

உண்மைக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற பொய்யைப் பயன்படுத்துவான். நரேந்திர மோடி தன்னை இந்து என்கிறார். அவர் என்றைக்கு உண்மையைப் பாதுகாத்திருக்கிறார். அவர் இந்துவா இந்துத்வவாதியா? என கேள்விக்கணைகள் மூலம் வறுத்தெடுததார். ராகுலின் அதிரடி பேச்சு டிரெண்ட் ஆகி வருகிறது.  

;