politics

img

துயரத்திலும் எரிபொருள் விலையை அதிகரிக்க மோடியை தவிர எவராலும் முடியாது....   ஏ.விஜயராகவன் சாடல்....

திருவனந்தபுரம்:
பெரும்பாலான மாநிலங்களில் ஊடரங்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. பலருக்கு வேலைகள் இல்லை. மக்கள் மிகவும் துயரப்படுகையில், நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் எரிபொருள் விலையை இரக்கமின்றி அதிகரிக்க முடியாது. 

இதுபோன்ற ஆட்சியாளர்களுடன் மக்கள் கணக்கு தீர்க்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஏ.விஜயராகவன் கூறினார்.பெட்ரோல் விலை 97 பைசா, டீசல் ரூ.1.15 என நான்கு முறை உயர்த்தப் பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு, இந்த விலையேற்றம் தொடர்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை ஏற்றுவதாக கூறி பொறுப்பில் இருந்து மத்திய அரசு தப்ப முடியாது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விலை உயர்வு உள்ளது. அதனால்தான் மோடியோ மற்ற அமைச்சர்களோ பாஜகவோ இந்த தொற்றுநோய் காலக் கொள்ளை குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.

கோவிட்டின் இரண்டாவது அலையால் நாடு தத்தளிக்கிறது. நாட்டின் தலைநகரம் சுடுகாடாக காட்சியளிக்கிறது. இந்த நேரத்தில் மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் மத்திய அரசின் ஆதரவு தேவை. ஆனால் அதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மத்திய அரசு மக்கள் மீது அதிக சுமைகளை ஏற்றி கொடூரமாக வேட்டையாடுகிறது. இதற்கு எதிராக பலத்த குரல் எழுப்பப்பட வேண்டும் என்று விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;