politics

img

மம்தாவின் தேசிய அரசியல் தலைமை ஆசையை சுக்கு நூறாக நொறுக்கிய தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள்.....

தில்லி 
12 எம்.பி.க்கள் சஸ்பென்ட் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,  தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் 12 எம்.பி.க்கள் சஸ்பென்ட் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும் தேசிய அரசியல் தலைமை கனவில் இருக்கும் மம்தா, தன் பக்கம் இழுக்க முயற்சித்த தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி தலைவர்கள் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இது மம்தாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடக்கத்திலேயே மம்தாவை கண்டுகொள்ளவில்லை
மம்தாவின் தேசிய அரசியல் கனவை முதலில் களைத்தவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தான். மும்பையில் மம்தாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில்,."நான் யாரையும் (காங்கிரஸ்) ஒதுக்க மாட்டேன் எனவும், பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் எங்களுடன் (காங்கிரஸ் தலைமையில் நாங்கள் இருக்கும் கூட்டணி) சேருங்கள் என வெளிப்படையா அறிவித்தார். அதே போல சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மம்தாவை சந்திக்காமல் தனது மகனும், அமைச்சருமான ஆதித்யாவை அனுப்பி வைத்தார். 

தற்போது சோனியா காந்தி வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தரப்பில் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பங்கேற்றனர். 

;