politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

ஏப்ரல் 6 அன்று மூடப்படும் கேரள - தமிழக எல்லைகள்

கேரளத்தில் சட் டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 அன்று, தமிழக எல்லையோரத்தில் உள்ள உடும்பஞ்சோலை, பீர்மேடு, தேவிகுளம் ஆகிய 3 தொகுதிகளின்எல்லைகள் மூடப்படும் என்று கேரளஉயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிவேட்பாளர்கள் தொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையம் இந்த பதிலை அளித் துள்ளது.

                            ***************

கொட்டிக் கலசத்திற்கு தடை போட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரச்சார நிறைவு நாளன்று ஒவ்வொரு அரசியல் கட்சியினருமே, தங்களுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவைக் காட்டும்வகையில், பெரும்கூட்டத்தை கூட்டுவது, வாகனப் பேரணிகள் நடத்துவது வழக்கம். இந்த இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை, கேரளத்தில் ‘கொட்டிக்கலசம்’ என்று சொல்வது உண்டு. ஆனால், கேரளத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் காரணம் காட்டி, ‘கொட்டிக்கலசம்’ பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமையன்று திடீரென தடை விதித்தது.

                            ***************

போட்டியின்றி தேர்வான என்டிபிபி வேட்பாளர்!

நாகாலாந்து மாநிலம், நோக்சென் பேரவைத் தொகுதி உறுப் பினராக இருந்த அமைச் சர் சி.எம். சாங் மறைவையடுத்து அத் தொகுதிக்கு ஏப்ரல் 17 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தேர்தலில் போட்டியிட ஆளும் தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி (என்டிபிபி) வேட்பாளர் எச்.சூபா சாங் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

                            ***************

கைது பயத்தால் ஜாமீன் கோரும் பாஜக முன்னாள் அமைச்சர்!

இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, பாஜகவைச் சேர்ந்த கர்நாடகமுன்னாள் அமைச்சர்ரமேஷ் ஜர்கிஹோலிக்கு, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி, டிமிக்கி கொடுத்துவரும் ஜர்கிஹோலி, தற்போது, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன் ஜாமீன் பெறும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

                            ***************

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக சதி!

“நந்திகிராம் தொகுதியில், தோல்வி அடைவது உறுதி என்பது மம்தாவுக்கு தெரிந்து விட்டது. இதனால், இறுதிக்கட்ட தேர்தலின்போது, வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிடலாமா? என்று யோசித்து வருகிறார்” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு திரிணாமுல் துணைத்தலைவர் யஷ்வந்த் சின்ஹா பதிலளித்துள்ளார். மம்தா பானர்ஜி வேறு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று மக்களைக் குழப்பும் வகையில் பாஜக பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

;