politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை முழுமையாக கட்டுப்படுத்தவும் இல்லை; மூன்றாவது அலையை தடுத்து நிறுத்துவதற்காக நம்மையெல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கவும் இல்லை. இரண்டாவது அலையில் புதிதாக தொற்று பரவல் விகிதம் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை என்ற போதிலும், ஏற்கெனவே உள்ள தொற்று விகிதம் எவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைய வேண்டுமோ அந்த வேகத்தை எட்டவில்லை. 2021 மே 9 அன்று மட்டும்தான் அதிக அளவு புதிய தொற்றில்வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அந்த வேகம் இல்லை. இந்தப்பின்னணியில், கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா பாசிடிவ் விகிதம்சற்று அதிகரித்திருப்பது கவலை தருகிறது. எனவே பிரதமர் மோடி அவர்களே,உங்களது படாடோபமான வெற்றுப் பேச்சுக்களை நிறுத்துங்கள். உடனடியாக போர்க்கால அடிப்படையில் உலகம் முழுவதிலுமிருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள். இந்திய மக்கள் மற்றொரு சுகாதார பெரும் நெருக்கடியில்- பேரழிவில் சிக்குவதிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.

                                    *****************

கொரோனா தடுப்பூசியைப் பற்றி பேசும்போது கிடைக்கும் விபரங்கள் தொடர்ந்து அதிர்ச்சிகரமாகவே உள்ளன. நாட்டில் 8 மாநிலங்களில் மட்டும்தான் அவற்றின் மக்கள் தொகையில் 10 சதவீதத் திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 6 மாநிலங்கள் மிகச்சிறிய மாநிலங்கள் ஆகும். பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 8 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு காரணம் என்ன? தடுப்பூசி பற்றாக்குறைதான் அடிப்படைக் காரணம். இவற்றில் சில மாநிலங்களில் கடந்த ஒரு வார காலத்தில்பாதிப்பு விகிதம் மீண்டும் லேசாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இது மிகவும்ஆபத்தானது. அதனால்தான் சொல்கிறோம், உலகில் எங்கு தடுப்பூசி கிடைத்தாலும் அதை உடனே கொள்முதல் செய்யுங்கள் என்று!

                                    *****************

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மற்றுமொரு உதாரணத்தை மோடி அரசு கவனிக்க வேண்டும். உலக அனுபவம் என்ன என்பதைகற்றுக் கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார்கள். இது மிக மிக அதிகமான தடுப்பூசி விகிதம் மற்றும் மிக மிக குறைந்த தொற்றுப் பரவல் ஆகியவற்றின் மூலம்தான் சாத்தியமானது. ஐரோப்பிய நாடுகளில் இப்போது மைதானங்களில் விளையாடத் துவங்கிவிட்டார்கள். பெருவாரியான துறைகளில் முழுமையான இயல்பு வாழ்க்கை துவங்கிவிட்டது. அதற்கு அவர்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம்என்பதை உறுதியாக அமல்படுத்தியதுதான் காரணம். அது மட்டும்தான் வழி என்பது நம் கண்முன்னே காண்கிற உண்மையாகும். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. உதாரணத்திற்கு 10 லட்சம் மக்களில்எத்தனை பேருக்கு என்று கணக்கிலெடுத்தால், ஜூலை 7 விபரத்தின் படி பிரிட்டனில் புதிதாக 389 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 10 லட்சம் பேரில் புதிதாக 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியில்வெறும் 7 பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் வெறும் 13பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவை எடுத்துக் கொண்டால் 10 லட்சம் பேரில் 162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்10 லட்சம் பேரில் 30 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அந்த நாடுகளில் மக்கள்தொகை குறைவு என்பதுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் மட்டும்தான் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. பிற நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம்அதிகரிக்க அதிகரிக்க பாதிப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. பிரிட்டனில் 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டார்கள். பிரான்சில் 53 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டார்கள். ஆனால் இந்தியாவில் இதுவரை 21 சதவீதம் பேருக்குத்தான் செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெறும் 5 சதவீதம் பேர் மட்டும்தான். 

இந்த நிலையில் கடந்த ஒருவார கால நிலவரத்தை ஆய்வு செய்யும்போது இதற்கு முந்தைய வாரங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்த மாவட்டங் களின் எண்ணிக்கை 110 என்று இருந்தது. இப்போது 141 மாவட்டங்கள் என அதிகரித்து ஜூலை 7 நிலவரத்தின்படி 156 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கையும் சில மாநிலங்களில் மீண்டும் லேசாக அதிகரித்துள்ளது. எனவே மோடி அரசு உடனடியாக செயல்பட்டாகவேண்டும். மூன்றாவது அலையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

;