politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து....

ஆகஸ்ட் மாதத்தில் உற்ப த்தித் துறையில் மட்டும் 19 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன என்பது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்வெளியிட்டுள்ளது. கொரோ னா  ஊரடங்குகளுக்கு பிந்தைய விபரங்களின்படி ஒட்டுமொத்த வேலையின்மை 8.35 சதவீதமாக அதிகரித் துள்ளது. ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 39.97 கோடிபேர் ஏதேனும் ஒரு வேலையில்இருந்தனர்; ஆகஸ்ட் மாதத்தில் இது 39.78 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார மீட்சி பெற்றுவிட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடியின் படாடோபமான வெற்று விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால் உண்மை நிலை இதுதான். உற்பத்தித் துறை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. எனவேதான் கூறுகிறோம், உடனடி யாக மக்களின் கைகளில் பணம் கொடுங்கள் என்று.

                                         ******************  

“2016ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட குறைந்து கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை. 1947ஆம் ஆண்டு முதல் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதே இல்லை. சிலர், இது கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சி என்று வலிந்து சொல்லக்கூடும்; ஆனால் இது கொள்கை தோல்வி என்று பலரும் மதிப்பிடுகிறார்கள். இதன்விளைவாக நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் எனஅனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறார்கள்” என்று பொருளா தார ஆலோசகராக கவுசிக் பாசு கூறியிருக்கிறார். இந்தப் பேரழிவுப் பயணம்,பணமதிப்பு நீக்கம் மற்றும் மோசமான ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை அமலாக்கியதி லிருந்து துவங்கியது. மறுபுறத்தில், மோடி தனது கூட்டுக்களவாணி நண்பர்களுக்கு வங்கிகளிலிருந்து பெருமளவுபணத்தை கடனாக கொடுத்த தன்  மூலம் நாட்டு மக்களின் சேமிப்புகளையெல்லாம் சூறையாடியது; பெருந்தொற்று பாதிப்பை முறையாக கையாளாமல் குழப்பத்தை ஏற்படுத்தி மக்களை பெரும் துயருக்குள் தள்ளியது; தேசத்தின் சொத்துக்களையெல்லாம் மிகப்பெரும் அளவில் சூறையாடிக் கொண்டிருப்பது என்ற இவர்களது பயணம்தான் பொருளா தார பேரழிவுக்கு காரணம். பசி, பட்டினியை, ஏழ்மைத் துயரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமானால் உடனடியாக மக்களுக்கு நிவாரணங்களை அளித்திட வேண்டும்.

                                         ******************  

பாராலிம்பிக் போட்டி யில் இந்திய வீரர்கள் மகத்தான சாதனை படைத்திருக்கிறார்கள். உற்சாக மான செய்திகள் அங்கிருந்து வந்துள்ளன. சவால்களை யெல்லாம் தாண்டி நமது வீரர்கள் நம்மை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

;