politics

img

பிரசாந்த் கிஷோர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.... ஐ-பேக் நிறுவனத்துடன் 2026 வரை மம்தா கூட்டணி....

கொல்கத்தா:
தேர்தல் உத்திகள் வகுத்துத் தரும்‘ஐ பேக்’ நிறுவனம் உடனான ஒப்பந் தத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026-ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளார். இதுதொடர்பாக ‘ஐ பேக்’ (I-PAC) - திரிணாமுல் காங்கிரஸ் இடையேஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.2021 மேற்குவங்க சட்டப்பேரவைக்கான தேர்தலில், முழுக்க முழுக்க பிரசாந்த் கிஷோர் தலையிலான ‘ஐ பேக்’நிறுவனத்தை நம்பியே மம்தா களத்தில்இறங்கினார். அதற்கு பலனும் கிடைத்தது.திரிணாமுல் தலைவர்களை கொத்துக்கொத்தாக பாஜக தனது பக்கம் இழுத்தும் கூட அக்கட்சியால் மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பாஜக 100 இடங்களை பெற்று விட்டால், நான்தேர்தல் வியூக வகுப்பாளர் தொழிலையே விட்டு விடுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் தேர்தலுக்கு முன்னதாக சவால் விட்டிருந்தார். அதன்படியே பாஜக 77 இடங்களோடு நின்று போனது. மம்தாவே எதிர்பார்க்காத வகையில் 213 இடங்களில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

இதனால், பிரசாந்த் கிஷோரின் ‘ஐ பேக்’ நிறுவனம் மீது, அபார நம்பிக்கை அடைந்த மம்தா, தற்போது 2026 சட்டப் பேரவைத் தேர்தல் வரை, அந்நிறுவனம் உடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார். வழிநடத்தும் குழுவிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினாலும் ‘ஐ பேக்’ உடனான ஒப்பந்தம் தொடரும் என்று திரிணாமுல் அறிவித்துள்ளது.

;