politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் :- புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன்.
ச.சா - தெரியாம பேசுறாங்களா.. இல்லேனா திட்டமிட்டே பேசுறாங்களா..??
 

மத்திய அமைச்சர் வி.கே.சிங் :- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அரசிடம் சிறப்பு உத்தி.
ச.சா - பொருளாதாரம் நிலைகுலைஞ்சு போயிருக்கே.. அதுக்கு உத்தியாவது இருக்கா..??
 

பிரதமர் மோடி :- மக்கள் நலத்திட்டங்களை ஜார்க்கண்டில் துவக்கி வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ச.சா - மத்திலயும், ஜார்க்கண்டுலயும் ஆட்சில இருந்தும் பின்தங்கியிருக்குறது தெரிஞ்சு போச்சோ..??
 

பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் :- பாஜகவில் சேர ரஜினிகாந்த் முன்வந்தால் வரவேற்கிறோம்.
ச.சா - இப்புடிக் கெஞ்சுறாங்களே.. அடுத்து வேற மாதிரி கேப்பாங்களோ..??

;