politics

img

பிணங்களின் மீது அரசியல் செய்கிறது ம.பி. பாஜக அரசு.... உண்மையை மறைப்பதால் கொரோனா மறைந்து விடாது..... காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடும் தாக்கு....

போபால்:
கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கையை அலட்சியம் செய்த,மத்தியப்பிரதேச பாஜக அரசு, தற்போது உண்மையை மறைத்து பிணங்களின் மீது அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் மூத்தத்தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92 ஆயிரத்து 773 பேர்சிகிச்சையில் இருக்கும் நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் மத்தியப்பிரதேச பாஜக அரசு மறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கமல் நாத் கூறியிருப்பதாவது:“மத்தியப் பிரதேசத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் படுக்கைகள் போதுமான அளவுக்கு இல்லை. ஆனால்,எல்லாம் போதுமான அளவிற்கு இருப்பதாகபாஜக முதல்வர் கூறுகிறார். கொரோனாவின் இரண்டாவது அலைகுறித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கடந்த 3 மாதங்களாக எச்சரிக்கை விடுத்துவந்தன.

ஆனால் அவற்றை பாஜக அரசுஅலட்சியம் செய்தது. தற்போது பிணங்களைவைத்து அரசியல் செய்கிறது. உண்மையை மறைப்பதன் மூலம் கொரோனாவை தடுத்துவிடலாம் என்று அவர்கள் (பாஜக அரசு) நினைக்கின்றனர். ஆனால், அது நடக்காது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் சென்று நிலைமையைப் பார்வையிட வேண்டும் என நான் அறிவுறுத்துகிறேன். எனது சக்திக்கு ஏற்ப எனது முழு ஆதரவையும் நான் அவருக்கு வழங்குவேன். மத்தியப்பிரதேசத்திற்கு வழங்கும் தடுப்பூசியை அதிகரிக்க ஏற்கெனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனுடம் நான் பேசியுள்ளேன்.இவ்வாறு கமல் நாத் கூறியுள்ளார்.

;