politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அரசு :- நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை.
ச.சா - மக்கள் நிராகரிச்சும் கேக்க மாட்டேங்குறாங்களே..??
 

பாஜக எம்.பி. மாலிக் :- ஒரே நாடு, ஒரே மின் கட்டணம் தேவை.
ச.சா - மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களே..??
 

செய்தி :-  நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா வன்முறையைத் தூண்டுவதாக பாஜக கருத்து.
ச.சா - இப்படித்தான் எல்லார் மேலயும் தேசத்துரோக, பயங்கரவாத, வன்முறைவாதின்னு முத்திரை குத்திட்டே வர்றாங்க..!!
 

சீன அரசு :- நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவிகிதமாகக் குறைவு.
ச.சா - ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவுதான் இருக்கும்னு சீன அரசே கணிச்சுது..!!

;