politics

img

மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி : சிவசேனா எம்பி சஞ்சர் ராவத் பரபரப்பு புகார்....

மும்பை
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி செய்கிறது. இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவத் பரபரப்பு புகார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் சஞ்சய் ராவத் கூறியுள்ளதாவது,"மும்பையை ஒன்றிய அரசால் ஆளக்கூடிய நகரமாக மாற்றுவதற்காக நிதியுதவி செய்த ஒருவர் மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய பில்டர் எனவும், வாரணாசியைச் சேர்ந்த ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். முழு சதித்திட்டமும் பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையா தலைமையில் நடக்கிறது. இந்த சதித்திட்டத்தை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிந்திருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில் மும்பையில் மராத்தி மக்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறி மும்பை மாநகரை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சோமையா தலைமையிலான குழு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும்" அவர் கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிலமோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ள சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய ஏஜென்சிகள் மூலம் தனக்கு எதிராக பாஜக சதி செய்கிறது பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;