politics

img

சட்டமன்றத் துளிகள்...

பட்டாசு ஆலை விபத்து: ரூ.1 லட்சம் நிதி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம்,  சிப்பிப்பாறை கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் உரிமம் இல்லாமல் நடந்த அந்த ஆலை மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் சட்டப்பேர வையில் சனிக்கிழமை (மார்ச்21) கேள்வி நேரத்திற்கு பிறகு திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அதிமுக உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.  இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி,“ விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம்,  சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலையில்  ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர்  பலியானார்கள். 10 நபர்கள் காயமடைந்துள்ளனர். மருத்  துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என்றார். பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் மிகுந்த எச்ச ரிக்கையுடனும் பாதுகாப்புடனும் பட்டாசு தயாரிக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்றும் விபத்து  நடந்த அந்த ஆலை உரிமம் இல்லாமல் செயல்படுவ தாக தெரிவித்துள்ளதால் இதுகுறித்து காவல்துறை யினர் மூலம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்க ளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காய மடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்ப டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தயார் நிலையில் தமிழகம்!

தமிழகத்தில் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்  பட்டனர். அதில் ஒருவர் குணமாகி விட்டார். இன்னொரு வர் சிகிச்சையில் உள்ளார். மொத்தம் 1780 பேர்  தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் இதுவரைக்கும் 1,120 படுக்கைகள் உள்ளன. இதனை ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 20 படுக்கைகள் வீதம் மூன்று மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு  மருத்துவமனைகளில் ஏற்கெனவே 1,100 வெண்டி லேட்டர்கள் உள்ளன. இப்போது 560 வெண்டிலேட்டர் கள் கூடுதலாக வாங்கி தயார் நிலையில் வைத்தி ருக்கிறோம். மாவட்ட தலைமை மருத்துவமனை மட்டுமின்றி இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலும் இந்த வசதி  ஏற்படுத்தியிருக்கிறோம். தனிப்படுத்தப்பட்ட வார்டு  உள்ளிட்ட மூன்றடுக்கு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறது. காரணம், இத்தாலி போன்ற வளர்ந்த நாடு களில் நடந்த தவறுகளில் இதுவும் ஒன்றாகும். எனவே,  தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பற்றாக்குறை உண்மைதான்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததைக் காட்டிலும் தற்போது  ஒரு லட்சம் முக கவசம் கொள்முதல்  செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மருத்துவ துறை பணியாளர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்காக மூன்று அடுக்கு  பாதுகாப்பு கொண்ட 10 லட்சம் முககவசமும் கொள்முதல்  செய்கிறோம்.  கொரோனா தாக்கம் எதிரொலியாக முக கவசம்,  கிருமி நாசினி, பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர் என அனைத்தும் நாடுமுழுக்க பற்றாக்குறை ஏற்பட்டி ருப்பது உண்மைதான். காரணம், அனைத்து நாடுகளி லும் ஒரே நேரத்தில் தேவைப்படுகிறது. இருந்தாலும், தமி ழக அரசு ஜனவரி மாதமே மருத்துவத்துறையின் மூலம்  அறிவுறுத்தியதாலும் நேரில் சென்று வற்புறுத்தியதாலும் விலை நிர்ணயத்துடன் கிடைக்கிறது.

யாருக்கு பரிசோதனை?

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களிடமும் ஒரு  ஆதங்கம் இருக்கிறது. அதாவது, லேசாக இருமல், சளி  இருக்கிறது என்றாலோ, மும்பை, தில்லியில் இருந்து  வந்த ஒருவரை பார்த்துவிட்டார்கள் என்றலோ உடனை அரசு மருத்துவமனைக்கு வந்து கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த பரிசோதனை செய்துகொள்ள அதிக  ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும்  என்றால் இதுவரைக்கும் அரசு மருத்துவமனை பக்கமே வராத நபர்கள் எல்லாம் இப்போது படையெடுக்கி றார்கள்.  கொரோனா பாதித்த நாடுகள், மாநிலங்களில் இருந்து  தமிழகம் வந்தவர்களில் இருமல், மூச்சு திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்க வேண்டும். அதே போன்று பாதித்தவர்களுடன் தொடர்ந்து இருந்த வர்கள் மட்டுமே ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை  செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு தேவையேயில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

கூட்டு மருந்து சிகிச்சை...

மருந்துகள் கண்டுப்பிடிப்பிலும் நாம் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம். சென்னை ராஜூவ் காந்தி  அரசு மருத்துவ மனையில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு கூட்டு மருந்து  அளித்து வருகிறோம். அதை எதிர் நோக்கி நோய் தடுப்பு மருந்தையும் கொடுத்து இருக்கிறோம். எதிர்க் காலத்தில் நமக்கு இந்த மருந்துகள் தேவைப்படும் என்பதை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அந்த மருந்துகளையும் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து வைத்திருக்கிறோம்.

கட்டுப்பாட்டு அறை!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் 24 மணி  நேரமும் மூன்று ஷிப்ட் முறையில் 100 பேர் பணியாற்றும் கட்டுப்பாட்டு அறை ஒன்று டிஎம்எஸ் வளாகத்தின் புதிய கட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

(சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதிலிருந்து)


 

;