politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பெருந்தொற்று மீண்டும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டுநடந்த மிகப் பெரும் மனித துயரத்தை மீண்டும் இந்த தேசம் அனுமதிக்க முடியாது; புலம் பெயர்தொழிலாளர்களின் சொல் லொண்ணா துயரமும் மரண வேதனையும் இனி ஒருமுறை நிகழக் கூடாது. இதை தடுத்து நிறுத்த வேண்டு மானால், பிரதமர் ஜி அவர்களே, இப்போதாவது தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 வருவாய் உதவியாக அளியுங்கள்; தேவைப்படும் அனைவருக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்குங்கள்.

                                        *******************

பிரதமர் ஜி அவர்களே, விவசாயிகளின் இடைவிடாத போராட்டமும் தொடர்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்தை தொடர்ந்து புதுப்பித்து வருகிறார்கள். ஆயிரமாயிரமாய் பெண்கள் மறியல் போராட்டங்களிலும், போராட்டக் களத்தில் பல்வேறு மையங்களில் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். மறுபுறத்தில் பஞ்சாப் மாநிலத்தில், அரசு கொள்முதல்நடவடிக்கைகளை அறிவித்து துவக்கியுள்ள நிலையில், அங்கு கமிஷன் மண்டிகள் காலியாக காட்சியளிக்கின்றன. ஏனென்றால் விவசாயிகள் தொடர்போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.

இந்த உண்மைகளை உணருங்கள் பிரதமர் ஜி. நான்கு மாதங்களுக்கு மேலாக லட்சோப லட்சம் விவசாயிகளின் போராட்டம்; 350க்கும் மேற்பட்டவிவசாயிகள் உயிர் நீத்து தியாகிகளாக உரமேற்றிக் கொண்டிருக்கும் போராட்டம்; இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போராட்ட அலை; கடந்த 70 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு நமது அன்ன தாதாக்களின் பேரெழுச்சி. ஆனால் அனைத்தையும் கண்களை மூடிக் கொண்டு, காணவும், கவனிக்கவும் மறுக்கிறது உங்கள்அரசு. 70 ஆண்டுகளில் இப்படிப்பட்ட மனித தன்மையற்ற, ஈவிரக்கமற்ற அரசை இந்த நாடு கண்டதில்லை.உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.

                                        *******************

பிரதமர் ஜி அவர்களே, பெருந்தொற்று தீவிரமடைந்து வருவதை பாருங்கள்.நீங்கள் பதுக்கி வைத்துள்ள - கணக்கில் கொண்டு வராத, தணிக்கைக்கு உட்படுத்தப்படாத, வெளி உலகிற்கு வெளிப்படையாக இவ்வளவு தொகைவந்தது என்று சொல்லப்படாத உங்களது தலைமையிலான தனியார் டிரஸ்ட் நிதிக்கு வந்திருக்கக் கூடிய லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை உடனடியாக வெளியில் கொண்டு வாருங்கள்; மக்களுக்கு நேரடியாக பணமாக அவர்களது கணக்குகளில் செலுத்துங்கள்.

                                        *******************

மேற்குவங்க தேர்தல் களத்தில் ஏப்ரல் 10 அன்று தலைமை தேர்தல்ஆணையம் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரத்தை அளித்திருக்கிறது. அதில், அரசியல் தலைவர்களோ, வேட்பாளர்களோ பாதுகாப்புப் படையினர் குறித்து தங்களது பிரச்சாரத்தில் குறிப்பிடுவதை அல்லது விமர்சிப்பதைதவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. முதலில் தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் மேற்குவங்க தேர்தல் பிரச்சாரம் அனைத்திலும் நமது பாதுகாப்புப் படையை பற்றி, அதன் வலிமையை பற்றி, அதை பிரயோகிப்பதை பற்றி மிக அதிக அளவில் பேசியதே பிரதம மந்திரியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும்தான். உண்மை இப்படியிருக்க, தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏன் இந்த அறிவுரையை சொல்கிறது? தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை என்பது தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வருகிறது.

                                        *******************

இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 12.5 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடையும் என்று மோடி அரசு ஒரு தோற்றத்தை அளிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டில், வரலாறு காணாதஅளவிற்கு மைனஸ் 8 சதவீதம் என்ற அளவிற்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள இந்திய பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு, அதையும் தாண்டிதற்போதைய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்ட வேண்டுமானால் மிக அதிவேகமான வளர்ச்சி இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று பன்னாட்டுநிதி நிறுவனம் கூறியுள்ளது.இந்திய பொருளாதாரம் எப்போது மீட்சி பெற துவங்கும் என்பது முக்கியமான கேள்வி. மக்கள் கைகளில் அவர்கள் செலவழிப்பதற்கு பணம் இருந்தால்மட்டுமே, சந்தைகளில் பொருட்களுக்கான கிராக்கி அதிகரிக்கும். அப்போதுதான் பொருளாதாரம் மீட்சி பெறவே துவங்கும். இதற்கு அரசு மிகப் பெருமள
வில் பொதுச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும். மிகப் பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தற்போது உடனடியாக - நேரடியாகமக்கள் கரங்களில் பணத்தை கொடுக்க வேண்டும். இலவச உணவு வழங்கவேண்டும்.பாஜக அரசு இதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க தயாராக இருக்கிறதா?

                                        *******************

மகாத்மா ஜோதிபா பூலேவின் பிறந்த நாள்இன்று (ஏப்ரல் 11). அவரது கருத்துக்களும், செயல்பாடுகளும் என்றென்றும் நமக்குஉத்வேகத்தை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், உறுதிப்பாட்டோடு அதை செய்து முடிக்கவும் நமது பலத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டு முன்னேறுவோம்.


 

;