politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பிரதமர் மோடி நமது பொருளாதாரத்தை மிக மிக ஆழமான, மீள முடியாத வீழ்ச்சிக்குள் தள்ளிவிட்டார். மிரட்டும் வேலையின்மை, அதிகரிக்கும் பசி, நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டிருக்கும் துயரங்கள் என மக்கள் கொடுமையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். அந்த மக்களை பார்த்து பிரதமர் என்ன சொல்கிறார் என்றால், “தொழில்கள் எளிதாக நடக்க உதவுங்கள்” என்கிறார். மக்களின் வாழ்நிலைமையை, வாழ்வாதாரங்களை எளிதாக்குவதற்கு பதிலாக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில்களை எளிதாக்குவது பற்றி கவலைப்படுகிறார். மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத போது, தொழில்கள் எந்தவிதத்திலும் முன்னேறாது. 

இதற்கு முன்பு திருவாளர் மோடி அவர்கள்,தனியார் லாபத்திற்காக தேசத்தின் சொத்துக்களை சூறையாடிய போது, அவர்களுக்காக தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக் கட்டியபோது, விவசாயிகளின் நலன்களையும், இந்தியாவின்உணவு பாதுகாப்பையும் அழித்தொழித்த போது, இந்த நாட்டின் மக்களை பார்த்து, தனியார் பெருமுதலாளிகள் ‘செல்வத்தை உருவாக்குபவர்கள்’ என்றும், எனவே அவர்களுக்கு மரியாதை கொடுங்கள் என்றும் கூறினார். 

மோடி அவர்களே, செல்வம் என்பது பணத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்ற மதிப்பு. அந்த மதிப்பு, உழைக்கும் மக்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. நீங்கள் அவர்களை அழித்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களது உரிமைகளை ஒழித்துக் கட்டுகிறீர்கள். அவர்களிடமே சென்று, அவர்களால் உருவாக்கப்பட்ட மதிப்பு மிக்க செல்வங்களை கொள்ளையடித்து செல்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள்
என்று உத்தரவு போடுகிறீர்கள். மோடி அவர்களே, மக்கள் பேரலையாக எழுந்து கொண்டிருக்கிறார்கள். சுரண்டல் கொள்ளையர்களுக்கு எதிராக போர்க் குணத்தோடு அவர்கள் மோதுவது உறுதி.
 

;