politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் முழக்கத்தை நாடு முழுவதும் எதிரொலிக்கும் விதமாக, புதன்கிழமை இடதுசாரிக் கட்சிகள் ஆவேசமிக்க போராட்டத்தை நடத்தினோம். இன்றைக்கு ஜம்மு-காஷ்மீரில் அமலாக்கும் அராஜகத்தைத்தான் நாளைக்கு நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும், அது இந்திய குடிமக்களுக்கு உறுதிசெய்துள்ள சுதந்திரங்களையும், அடிப்படை உரிமைகளையும் மட்டுமல்ல; இந்தியா என்ற மாபெரும் தேசத்தை வரையறை செய்யும் ஒவ்வொரு மதிப்பையும் அழித்தொழிக்கிறது பாஜக அரசு. மூன்றாண்டுகளுக்கு முன்புதான், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அவசியம் ஆலோசனை நடத்துவோம் என்று மோடி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அதே அரசு இன்றைக்கு காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது. காஷ்மீரையே சிறை வைத்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காஷ்மீரை துண்டித்துள்ளது. இதற்கு எதிராக அணிதிரள்வதும் ஒன்றுபட்டு போராடுவதும் தவிர வேறு வழியில்லை.