politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

உ.பி. அரசை பாராட்டுவதாக ராஜ்நாத் சிங் காமெடி!

கொரோனா தொற் றைக் கையாள்வதில் உ.பி. பாஜக மோசமாக இருப்பதாக அந்தக் கட்சியின் எம்.பி., எம்எல்ஏ-க்களே குற் றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் ஆதித்யநாத்திற்கு கடிதங்களை எழுதி வருகின்றனர். ஆனால், உ.பி. மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி. அரசு வீடு வீடாக கொரோனா பாதித்தோரை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவருவதாகவும், இதை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுவதாகவும் காமெடி செய்துள்ளார்.

                         ****************

மாட்டுச் சாண குளியலுக்கு அழுவதா, சிரிப்பதா?

கொரோனாவை விரட்டுகிறோம் என்று சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் மாட் டின் சாணத்தை உடலில் பூசிக் கொள்வதும், மாட்டின் சிறுநீரைக் குடிப்பதுமாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது மருத்துவர்கள் உட்படஅனைத்துத் தரப்பினரையும் கடுப் பாக்கியுள்ளது. இந்நிலையில், மாட்டுச் சாணக் குளியல் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், “நாங்கள் இதை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா..?’ என்று கிண்டலடித்துள்ளார்.

                         ****************

அகில் கோகோய் பதவியேற்க என்ஐஏ நீதிமன்றம் ஜாமீன்!

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அசாமின் சமூக செயற்பாட்டாளர் அகில் கோகோய், ‘ஊபா’ சட்டம் உட்பட 13 பிரிவுகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். எனினும் கடந்த மாதம் நடந்த தேர்தலில் சிறையில் இருந்தவாறே, பாஜக வேட்பாளரை தோற்கடித்து எம்எல்ஏ ஆனார். இந்நிலையில், அவர் எம்எல்ஏவாக பதவியேற்க, என்ஐஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

                         ****************

பாஜக எம்எல்ஏக்கள்  2 பேர் ராஜினாமா!

மேற்கு வங்க மாநிலம், கூச் பிகார் தொகுதி பாஜக எம்.பி.நிதிஷ் பிரமணிக், ராணாகாட் தொகுதி பாஜக எம்.பி. ஜகன்னாத் சர்க்கார் ஆகியோர், அண்மையில் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், தின்கதா தொகுதி எம்எல்ஏ பதவியை நிதிஷ் பிரமணிக்கும், சாந்திபூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ஜகன்னாத் சர்க்காரும் ராஜினாமா செய்துள்ளார். 

                         ****************

மயான தொழிலாளர்களும் முன்களப் பணியாளர்களே!

குஜராத் மாநில பாஜக அரசானது, மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமன்றி, அம்மாநிலத்தின் மயானங்களில் பணிபுரியும் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது. மயானத் தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத் தில் முடிவு செய்துள்ளது.