politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

3-ஆவது முறையாக முதல்வரானார் மம்தா!

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்ற 292 இடங்களில் 213 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, புதனன்று 3-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர்ஜகதீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முன்னாள் முதல்வர் புத்ததேவ்பட்டாச்சார்யா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பீமன்போஸ், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிஉள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

                                ****************

முகக்கவசம் அணியாததற்கு மோடிதான் காரணம்

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரும், அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தேசியத் துணைத்தலைவருமான சாமியார் ஆத்மானந்த் சரஸ்வதி, முகக்கவசம் அணிய முடியாது என்று பிடிவாதம் பிடித்துள்ளார். அவரைப் போலீசார் தடுத்து நிறுத்திக் கேட்டதற்கு, ‘பிரதமர் மோடி எங்களுடைய நலனை பாதுகாத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதைத் தான் நான் கடைபிடிக்கின்றேன். முகக்கவசம் அணிந்தால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. இதனால் விபரீதம் ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பு. எனவே தான் நான் முகக் கவசம் அணிவதில்லை’ என்று கூறியுள்ளார்.

                                ****************

மோடியைப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம்!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தவர்,ஐஆர்எஸ் அதிகாரி ஆனந்த் தம்பி. இவர் சில நாட்களுக்கு முன்புதனது டுவிட்டர் பக்கத் தில், ‘பிரதமர் மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாளுகிறார்’ என்று பாராட்டி புகழ்ந்திருந்தார். இதனை பாஜகவினர் அதிகளவில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், மோடியைப் பாராட்டிய, அதிகாரி ஆனந்த் தம்பியே, தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 32 வயதில் உயிரிழந்துள்ளார். 

                                ****************

ஆதித்யநாத்திற்கு  மர்ம நபர்கள் கெடு!

உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இன்னும் நான்கு நாட் களுக்கு மட்டுமே உயிரோடு இருப்பார் எனமர்ம நபர்கள் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து உத்தரப் பிரதேசகாவல்துறை கட்டுப்பாட்டு அறையின்வாட்ஸ் ஆப் குழுவுக்கு வந்த செய்தியில்இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மிரட்டல் செய்தி வந்த 20 நிமிடங்களில் சுஷாந்த் கோல்ப்சிட்டி காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

                                ****************

மம்தா முதல்வராக தார்மீக உரிமை இல்லை!

‘மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார்.மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும்? எனவே, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர்பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை மம்தா இழந்து விட்டார்’ என்று திரிபுரா மாநில பாஜக முதல்வர்பிப்லப் குமார் கூறியுள்ளார்.