மே 2 அன்று கேரளத்தில் ஊரடங்கு இல்லை...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 அன்று முழு பொதுமுடக்கத்தைக் அமல் படுத்தக் கோரி அம் மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா கால வாக்குஎண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் செய்துள்ளதால், பொதுமுடக்கத்திற்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
**************
முன்களப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸ்!
‘கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களும், செவிலியர் களும் தங்கள் குடும்பத்தையும் மறந்து அர்ப் பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வருகிறார் கள். அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர் களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்’ என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
**************
கம்மின்ஸை தொடர்ந்து பிரட் லீ 41 லட்சம் நிதியுதவி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பேட் கம்மின்ஸ், இந்தியர்களின் ஆக்சிஜன் தேவைக்காக, ரூ. 29.12 லட்சம் நிதியுதவி அளித்தார். அவரைத் தொடர்ந்து,மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பிரட்லீ-யும் ரூ. 41 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். ‘இந்தியா எனது இரண்டாவது வீடு’என்றும், ‘இந்தியாவை தற்போது சூழ்ந் துள்ள கொரோனா பிடியின் இறுக்கம் என்னை வாட்டமடைய செய்துள்ளது’ என்றும் லீ குறிப்பிட்டுள்ளார்.
**************
இறந்தவர்களைப் பற்றி பேசுவது வீண் வேலை!
‘ஹரியானா மாநிலத் தில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான தரவுகளை அரசாங்கம் மறைக்கிறது என்பதுஅர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இறப்புகள் குறைவானவை அல்லது அதற்கு அதிகம் என்று எண் ணிக்கை குறித்து விவாதிப்பதில் எந்தஅர்த்தமும் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பரபரப்பை ஏற்படுத்துவதால் மட்டும் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வந்துவிடப் போவது இல்லை!’ என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அலட்சியமாக கூறியுள்ளார்.
**************
இறுதிச் சடங்கு செலவை ஏற்ற ராஜஸ்தான் அரசு!
ராஜஸ்தானில், கொரோனா தொற்றால் மரணம் அடைவோரின் இறுதிச் சடங்குக் கான செலவுகளை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதற்காக ரூ. 34.56 கோடிநிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். கொரோனா தொற்றுக்கு ராஜஸ்தானில் இதுவரை 3806 பேர் இறந்துள்ள நிலையில், இறந்தவர்களின் உடல்களை சடலங்களை எடுத்துச் செல்ல இலவச வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.