politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

இந்தியாவின் நிலை அச்சமூட்டுகிறது..!

கொரோனா தொற் றின் இரண்டாவது அலைஇந்தியாவில் வேகமெடுத்துள்ள பின்னணியில், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் துயரத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சமூகம் உடனடியாக தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்’ என ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

                                   **************

நாடாளுமன்ற முற்றுகையை ஒத்திவைத்த விவசாயிகள்

வைரஸ் பரவல் வேக மெடுத்துள்ளதால் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன் றம் நோக்கிய பேரணியை தள்ளி வைத்திருப் பதாக, பாரதிய கிசான்யூனியன் (ரஜீவால்) தலைவர் பல்பீர் சிங் ரஜீவால் கூறியுள்ளார். விவசாயிகள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ள போதிலும், நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் போக்குவரத்துக்கு ஒருபோதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                   **************

இறப்புச் சான்றிதழ்களிலும் மோடி படம் போட வேண்டும்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படம் இடம்பெற்றிருப்பது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதில் கூடவா விளம்பரம் தேட வேண்டும்? என்று பலரும் பிரதமர் மோடியைவிமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில்மோடி படம் போடுவது போல, ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுமா? என்று திரிணாமுல் கட்சி எம்.பி. மஹூவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

                                   **************

ஆக்சிஜனுக்கு 1 ரூபாய் கூட செலவிடாத தில்லி அரசு!

கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.822 கோடியை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. இந்த தொகையில், 800 ஆக்சிஜன் ஆலைகளை அமைத்திருக்க முடியும். 750 மெட்ரிக் டன் கொள்ளளவு ஆக்சிஜன் சேமிப்புத் திறனை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், கெஜ்ரிவால் அரசு ஆக்சிஜனுக்காக ஒரு ரூபாய்கூட செலவிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.