politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் வந்ததா?

“ரேசனில் அரிசி, பருப்பு இலவசம் என பாஜக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. இதேபோன்று பாஜக அளித்த வாக்குறுதிகளை நம்பி, கடந்தமுறை அந்தக் கட்சிக்குபலர் வாக்கு செலுத்தினர். அவர்களிடம் கேட்க விரும்புவதெல்லாம், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று அவர்கள் கூறினார்களே.. அந்தப் பணம் வந்து சேர்ந்ததா? என்பதுதான்..” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்விஎழுப்பியுள்ளார்.

                                *************

தேவசம் போர்டுகளை நாங்கள் கலைப்போம்..!

லவ் ஜிகாத்-தால்கேரளத்தில் அதிகமான கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்; ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு ‘லவ் ஜிகாத்’தை ஆதரிக்கிறது; கேரளத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்ததலைவருமான சதானந்த கவுடா கூறியுள்ளார். மேலும், “பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் தேவசம் போர்டுகள் கலைக்கப்படும். கோயில் நிர்வாகங்கள் பக்தர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றும் கவுடா வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளார்.

                                *************

தேஷ்முக் விவகாரத்தில் பாஜக சதி செய்கிறது... 

“பிப்ரவரி மாத மத்தியில், அமைச்சர் அனில் தேஷ்முக் சச் சின் வாஸை சந்தித்ததாக பரம்வீர் சிங் குறிப் பிட்டுள்ளார். ஆனால் அமைச்சர் தேஷ்முக் அந்தக் கால கட்டத்தில்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 27 வரை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்; இதிலிருந்தேபரம் வீர் சிங்கின் குற்றச்சாட்டில் உண்மைஇல்லை என்பது தெரிகிறது” என்று என்சிபி தலைவர் சரத் பவார் கூறியுள் ளார். மான்சுக் ஹிரன் மரணத்தை திசைத்திருப்பவே அமைச்சர் மீது புகார் கூறப்பட்டுள்ளதாகவும் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

                                *************

உ.பி. பெண்களுக்காக மூன்று காவல் படைகள்!

உ.பி. மாநில பாஜக அரசிடமிருந்துதான் பெண்களைக் காக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பெண்களை பாதுகாப்பதற் காக, பெண்கள் மட்டுமே இடம்பெறும் மூன்று சிறப்பு காவல் படைகளை (Provintial Armed Constabulary) அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் படைகள் சுதந்திரப் போர் வீரர்களான ராணி அவந்தி பாய் லோதி, உதா தேவி மற்றும் ஜல்காரி பாய் ஆகிய மூன்று பேர்களின் பெயர்களில் அழைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

                                *************

ரூ. 3000 கோடியை எட்டிய ராமர் கோயில் வசூல்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி வசூல், நாடு முழுவதும் கடந்த ஜனவரி 14 அன்று துவங்கியது. இதில் தற்போதுவரை ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ கணக்கில்ரூ. 3000 கோடிக்கும் அதிகமாக நிதிசேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.