குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்குவோம்
காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால் அசாம் மாநிலத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 365 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதுடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம், வீட்டுக்கு 200 யூனிட்மின்சாரம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். நான் பிரதமர் நரேந்திர மோடிஅல்ல; எனவே, பொய் சொல்ல மாட்டேன்என்றும் அவர் கூறியுள்ளார்.
****************
நாங்கள் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம்!
அசாமில் பல்வேறு கட்சிகளும் நலத் திட்டங்களை அமல்படுத் துவோம் என்று வாக்குறுதி அளித்து வரும் நிலையில், பாஜக தலை வர் ஹிமந்தா பிஸ்வா மட்டும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கேரளா, மேற்குவங்கம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
****************
‘நான் பாஜகவில் சேர மம்தாவே காரணம்!’
1990-களில் ஒளிபரப்பான ராமாயணம் டி.வி. தொடரில் சீதையாக நடித்த தீபிகா ஏற் கெனவே பாஜகவில் இணைந்து அக்கட்சியின் எம்.பி.யாக இருந் தார். ராவணனாக நடித்த அர்விந்த் திரிவேதியும் பாஜக எம்.பி. ஆனார். ராமராக நடித்த அருண் கோவில் காங்கிரசில் இருந்து வந்தார். ஆனால், தற்போது அவரும் பாஜக-வில் இணைந்துள்ளார். ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துக்கு மம்தா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவரின் இந்த வெறுப்பே என்னை பாஜக-வில் இணையத் தூண்டியது என்று அருண் கோவில் பேட்டி அளித்துள்ளார்.
****************
‘நீங்கள் மட்டும் ஆடையே இல்லாமல் நடிக்கலாமா?’
உத்தரகண்ட் பாஜகமுதல்வர் தீரத் சிங்ராவத்தைத் தொடர்ந்து, பாஜக ஆதரவு நடிகையான கங்கனா ரணாவத்தும் ஜீன்ஸ் பேண்ட் அணிபவர்களை சாடினார். தற்போதுள்ள இளம்பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸை பார்த்தால் வீடு இல்லாத பிச் சைக்காரர்கள் போன்று தெரிவதாக டுவிட்டரில் அவர் பதிவிட்டார். இந்நிலையில், ஷாஹித் கபூர் படத்தில் கங்கனாஆடையில்லாமல் நடித்த புகைப்படத்தைவெளியிட்டு, நீங்கள் மட்டும் ஆடையே இல்லாமல் நடித்தீர்களே.. அது என்னவாம்? என்று டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
****************
கர்நாடக மசூதிகளில் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை
கர்நாடகாவில் மசூதிகள் மற்றும் தர்காக்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி அம் மாநில வக்பு வாரியம்சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஸ்பீக்கர் களின் ஒலி அளவுகளால் மனித உடல்நிலை மற்றும் மனநிலையில் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ள அந்த சுற்றறிக்கை, இதனை மீறுவோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 கீழ் அபராதம் விதிக் கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.