தில்லி
மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குழந்தை திருமணத் தடை (திருத்தம்) மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி,"அவசரமாக வேலை செய்யும்போது தவறுகள் நடக்கும்" என்று அரசுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க எம்பியுமான அதிர் ரஞ்சன் சவுத்ரி,"பெண்களின் திருமண வயது மாற்றம் தொடர்பாக இந்தியாவில் நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் குழந்தை திருமணத் தடை மசோதாவுக்கு அவசரப்பட வேண்டாம். அவசரமாக வேலை செய்யும் போது தவறுகள் நடக்கும்" என்று அரசுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.