பெங்களூரு : கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா , நேற்று முன்தினம் பதவியிலிருந்து விலகியதையடுத்து , கர்நாடகாவின் புதிய முதல்வராக , பசவராஜ் பொம்மை இன்று பதிவியேற்றார்.
கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி விலகியதை அடுத்து , கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருந்தது. இந்நிலையில் , நேற்றிரவு , பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் எடியூரப்பா , மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் , கட்சியின் மாநில தலைவர் நளினி குமார் கட்டில் , மேலிடப் பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான் , கிஷன் ரெட்டி , தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி மற்றும் பாஜக எம்எல்ஏ_க்கள் கலந்துகொண்டனர்.
இதில் சட்டசபை குழு தலைவராக அதாவது கர்நாடகாவின் அடுத்த முதல்வராக "பசவராஜ் பொம்மை" ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இதை எடியூரப்பா அறிவித்தார் . அதன் பிறகு மேடைக்கு வந்த பசவராஜ் , எடியூரப்பாவிடம் ஆசிபெற்றார் .
பின்னர் ராஜ் பவனுக்குச் சென்று , ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் ஆட்சி அமைக்கக்கோரி கடிதம் வழங்கினார் . இதை அடுத்து, இன்று காலை 11 மணியளவில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் , "பசவராஜ் பொம்மை" கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் .