politics

img

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழிற்பேட்டை அமைய பாடுபடுவேன்

திருவாரூர், ஏப்.4-இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கிட தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன் என்று நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் எம்.செல்வராசு உறுதி கூறினார்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.செல்வராசு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களைசந்திக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.கோட்டூர் ஒன்றியம் கங்களாஞ் சேரியில் நாகை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், சி.பி.எம் ஒன்றிய செயலாளர் எஸ்.சண்முகவேல், மதிமுக ஒன்றிய செயலாளர் சிவ.கதிரவன், வி.சி.க ஒன்றிய செயலாளர் கே.முருகையன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், ஒன்றிய செயலாளர் கே.மாரிமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாகை தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசு பனையூர், கோட்டூர், ஆதிச்சபுரம், மழவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்ரபாண்டியம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, புழுதிகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்ற வேட்பாளர் எம்.செல்வராசு, விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், பெண்களையும், இளைஞர்களையும், வர்த்தகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். 


வாக்கு சேகரிப்பின் போது மக்கள் மத்தியில் செல்வராசு பேசுகையில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 200-க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ளார் கள், ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில்கள் நாசமடைந்துள்ளன. நீட் தேர் வால் மருத்துவ மாணவர்களின் கல்வி சிதைந்துள்ளது. படித்த இளைஞர்களின் வேலை உரிமைபறிபோயுள்ளது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் கொல்லப் படுகிறார்கள்.இந்நிலையை போக்கிட மக்கள்விரோத மோடி ஆட்சியை அகற்றிட,விலைவாசி உயர்வினை கட்டுப் படுத்திட, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைத்திட, விவசாயிகள் கடன், மாணவர்களின் கல்விக்கடன பிரச்சினைக்கு தீர்வுகண்டிட, விவசாய தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள், பெண்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கிட, அனைத்து பகுதியினருக்கும் தரமான, சமமான கல்வி, மருத்துவ, வசதிகிடைத்திடவும், விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், நகர்ப்புற, மற்றும் கிராமப் புற மக்களை அச்சறுத்தும் வகையில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அனைத்து வழிகளிலும் அடியோடு தடுத்து நிறுத்திடவும், காவிரிபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடவும் தொடர்ந்து போராடுவேன், மேலும் இப்பகுதியில் தொழில்வளம் பெருகிடவும், இளைஞர் களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிவும் புதிதாக தொழிற் பேட்டை(சிப்காட்) தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன், இப்பகுதிகளில் வசித்து வரும் இளைஞர்கள், படித்தவர்கள், படிக்காதவர் கள் உள்ளிட்ட ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான திறன் அறியும்பயிற்சி மையம் (ஸ்கில்டுடிரெயினிங்) இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறைந்த செலவில் அனைவரும் பயன் பெறும் வகையில் அரசே பயிற்சி நிறுவனத்தை தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.