politics

img

‘அதிமுக ஏஜெண்டாக மாறிய தேர்தல் ஆணையம்’

சென்னை, ஏப். 15 -தேர்தல் ஆணையம் அதிமுக-வின் ஏஜெண்டாக செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப். 14) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு:சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக மத்திய அரசும், மாநில அதிமுக அரசும் உள்ளன. திமுக ஆதரவோடு ஆட்சி மாற்றம்நிகழ்ந்ததும் கிடப்பில் போடப் பட்டுள்ள சேது சமுத்திரத்திட்டத்தை முதல் பணியாக எடுத்து நிறை வேற்றுவோம்.முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு 2.40 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளது. 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று ஜெய லலிதா அறிவித்தார். அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கிறார்கள். உண்மையில், 5 வருடத்தில் 40 சதவிகிதம் கூடமுதலீடு வரவில்லை என்பதே உண்மை. 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.40 லட்சம் கோடிமுதலீடு வந்திருப்பதாகவும், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்கள். எத்தனை நிறுவனங்கள் எந்தெந்த நாட்டில் இருந்து தொழில் முதலீடு செய்துள்ளன என்று கேட்டால் பதிலில்லை. 


எட்டுவழிச்சாலை


நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறு கிறார். ஆனால் ரத்து செய்வோம் என அதிமுக ஏமாற்றுகிறது. சேலம்- சென்னை 8 வழிச் சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்த பிறகும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, முதலமைச்சர் எடப்பாடி, பாமக தலைவர் ராமதாசை வைத்துக் கொண்டு, அந்த திட்டத்தை நிறை வேற்றுவோம் என்கிறார். அந்த திட்டத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய்வரை எடப்பாடி மாமூல் வாங்கி இருப்பதால் அமைதியாக இருக்கிறார். அதிமுக அரசை பாஜக, காமெடி பீசாக்கி வேடிக்கை பார்க்கிறது. தராதரம் இல்லாமல் பேசியவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்திருக் கிறார்கள். கொள்கை இல்லாத வியாபாரக் கூட்டணி அது. பாமக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவர்களின் வாழ்வாதாரம் ஏழு தலைமுறைக்கு கவலைப்பட தேவை யில்லாத அளவுக்கு பெருகி இருக் கிறது. சில தினங்களுக்கு முன்பு பிஎஸ்கே குரூப் நிறுவனத்தில் ரெய்டு செய்துள்ளனர். அதில், குட்கா ஊழல் விவகாரத்தில் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்ச ருக்கும் பங்குள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றின்மீது நடவடிக்கை எடுக்கா மல், திமுக மீது களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்று துரைமுருகன் வீட்டிலும், அவரது மகன் நடத்தக் கூடிய கல்லூரியிலும் ரெய்டு நடத்துகிறார்கள். முதல் ரெய்டு நடத்திவிட்டு, அதன் பிறகு இரண்டு நாள் கழித்து ஏதோ எடுத்தோம் என்றுசொல்கின்றீர்கள். அதை எடுத் தீர்களா அல்லது வைத்துவிட்டு எடுத்தீர்களா? கோடி கோடியாக ஆளும் கட்சி கொண்டு செல்வதை ஏன் சோதனை செய்யவில்லை?


திமுக-வினர் இடங்களில் சோதனை செய்து வழக்கு போட்டு இருக்கின்றோம் என்று கூறும் தேர்தல் ஆணையம், அதிமுக-வினர் இடங்களில் ஏன் சோதனை நடத்த மறுக்கிறது. தி வீக் வாரப்பத்திரிகை ஆதாரங்களுடன் கூறியும் ஏன் சோதனை நடத்தவில்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறதா இல்லையா? தேர்தல் ஆணையம் அதிமுகவின் ஏஜெண்டாக செயல்படுகிறது.ஜெயலலிதாவின் மர்ம மரணம், கொடநாடு கொலை, கொள்ளை மற்றும் பொள்ளாச்சி கொடூரம் இதுகுறித்து முதலமைச்சர் முறையாக பதிலளிக்க மறுக்கிறார். அவர் களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்தக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலா ளர்கள் தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், அ.மு.நாசர், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம் ராவ், செல்வபெருந்தகை (காங்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.