அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு துறையில் அதானி குழுமம் "ஏகபோகத்தைப் பெற” பாஜக அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியதோடு இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 முக்கியமான கேள்விளை எழுப்பியுள்ளது.
1. கவுதம் அதானி 2017 ஆம் ஆண்டு மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்திலிருந்து, அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பை கொண்டிருக்கிறார். அவர், டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டுத் திட்டங்களைப் பெற்றிருக்கிறாரே?
2. அதானி நிறுவனங்கள், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றசாட்டுகளை சந்தித்துள்ள நிலையில், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை ஒரு கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? உங்களுக்கும்(மோடி), ஆளும் கட்சிக்கும் (பாஜக) இதில் ஏதேனும் கைமாறு உண்டா?
3. நமது ஆயுதப் படைகளின் அவசரகாலத் தேவைகளை அரசு ஏன் சாதகமாகப் பயன்படுத்தி, எதற்காக புத்தொழில்(ஸ்டார்ட்-அப்) நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் இழப்பில், அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை எளிதாக்குகிறது?
என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது