politics

img

வலைப்பதிவு: மோசடிகளும் பாஜகவும் அதன் கூட்டாளிகளும்...

அண்மையில் மோடியின் நெருங்கிய நண்பரும், பதஞ்சலிநிறுவனருமான ராம்தேவ், கொரோனா தொற்றை தீர்ப்பதற்கான மருந்து என்று சிலவற்றை விளம்பரம் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாடு நிறுவனம்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் இருமல் சளிக்குதீர்வு காணவும் மருந்துகள்  தயாரித்து இருப்பதாக விண்ணப்பித்துஅனுமதி வாங்கிவிட்டு, கொரோனாவுக்கான மருந்து என்று விளம்பரம்செய்ததை ஆட்சேபித்திருக்கிறது.

குறைந்தபட்ச வணிக நெறிமுறைகளை  கூடகடைப்பிடிக்காமல், கடைந்தெடுத்த பொய்களால் ஆன விளம்பரத்தைவெளியிட எங்கிருந்து இவருக்கு தைரியம் வருகிறது? சந்தேகமேஇல்லாமல் பிரதமருடைய நெருக்கம் என்பது தான் காரணம்.
பலநூறு ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலையில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் வாங்கியிருக்கிறார். நிலத்தின் சந்தைவிலையில் சராசரியாக 77% இவருக்கு தள்ளுபடி. மத்திய பிரதேசத்தில் இவர் வாங்கிய நிலத்திற்கு 88% தள்ளுபடி செய்து சந்தை விலையில் வெறும் 12 சதவிகிதம் கொடுத்து நிலம் வாங்கியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நாக்பூரில் பதஞ்சலி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவை முடித்துவிட்டு ராம்தேவ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், அமைச்சர் நிதின்கட்கரியிடம் எங்கள் நிறுவனத்திற்கு முறையான சாலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்க, அமைச்சர் புன்முறுவலோடு சாதாரண சாலை என்ன, தேசிய நெடுஞ்சாலையாகவே அதைஅறிவித்து விடுகிறோம் என்று சொல்ல, அதைக்கேட்டு ராம்தேவ்பலமாக சிரித்து கைதட்டிய காட்சிகள் வீடியோவில் உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அசாமில் 1200 ஏக்கர் நிலம் ஒரு பைசா கூட விலை இல்லாமல் இலவசமாக ராம்தேவின் யோக பீடத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியால் அளிக்கப்பட்டது. மோடி ஆட்சிக்குவந்த முதல் இரண்டு வருடங்களிலேயே இவருடைய வருமானம் இருமடங்கு அதிகரித்தது. 2017 மார்ச் வரை ஓர் ஆண்டு வருவாய் பத்தாயிரம் கோடிக்கு மேல்! வரக்கூடிய ஆண்டில் விற்பனை ரூ. 20,000 கோடியைதொடும் என ராம்தேவ் அறிவித்தார். ஏழைகளாகவும் உழைப்பாளிகளாகவும் புலம்பெயர் தொழிலாளிகளாகவும் ராம்தேவ், அம்பானிஅதானிகள் மட்டுமே மோடி அரசின் கண்ணுக்கு தெரிகிறார்கள் போலும்.

===உ.வாசுகி===

மத்தியக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)